APO & DC களை - தாய்த் துறைக்கு திரும்ப அனுப்ப உத்தரவு - Director Proceedings - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, July 8, 2024

APO & DC களை - தாய்த் துறைக்கு திரும்ப அனுப்ப உத்தரவு - Director Proceedings



உதவித் திட்ட அலுவலர்கள் (APO - HSS HM Cadre) & மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களை (DC - பட்டதாரி பணியிடம்) தாய்த் துறைக்கு திரும்ப அனுப்ப பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு. மாவட்டக் கல்வி ( தொடக்கக் கல்வி ) அலுவலங்களில் ( அரசு மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணிநிலையில் ) பணிபுரியும் 59 உதவித் திட்ட அலுவலர்கள் மற்றும் மாவட்டத் திட்ட அலுவலகங்களில் ( பட்டதாரி ஆசிரியர் பணிநிலையில் ) பணிபுரிந்து வரும் 67 கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பளர்களை அரசு மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் / பட்டதாரி ஆசிரியர்களாக அவர்கள் தாய் துறைக்கு அனுப்பி வைக்க ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது , எனவே , மாவட்ட கல்வி அலுவலகத்தில் ( தொடக்கக் கல்வியில் பணிபுரியும் 59 உதவித் திட்ட அலுவலர்களையும் , மாவட்டத் திட்ட அலுவலகங்களில் பணிபுரியும் , 67 கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களையும் அந்தந்த மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் / பட்டதாரி ஆசிரியர்களாக மாறுதல் வழங்கிட மாவட்டத்தில் அரசு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 59 உதவித் திட்ட அலுவலர்கள் (APO - HSS HM Cadre) மற்றும் 67 மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களை (DC - பட்டதாரி பணியிடம்) தாய்த் துறைக்கு திரும்ப அனுப்ப பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.

DSE Proceedings CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.