பள்ளிக் கல்வித் துறை - வாசிப்பு இயக்கக் கையேடு | 2024 - 2025
முதல் எட்டு; முதல் முயற்சி
இதுவரை குழந்தைகளுக்குக் கதை சொல்லியிருக்கிறோம். இப்போது அவர்களே கதைகளை வாசிக்க இருக்கிறார்கள். கேட்போராக (Listeners) இருக்கும் குழந்தைகளை வாசிப்போராக (Readers) மாற்றும் முயற்சி இது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் எளிய வீட்டுப் பிள்ளைகளின் கைகளில் சின்னச் சின்ன கதைப் புத்தகம் தரும் புதிய முயற்சி.
முன்னேறிய நாடுகளில் 70 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது குழந்தைகளின் சுய வாசிப்பு (Independent Reading). இந்தியாவில் முதன்முதலாகத் தமிழ்நாட்டில் 250 புத்தகங்களுடன் குழந்தைகளின் சுயவாசிப்பு இயக்கம் தோன்றுகிறது.
பங்கேற்போர்க்குத் தேவையானவை இரண்டு.
1. எளிய வீட்டுக் குழந்தைகள் மீது அன்பு.
2. வாசிப்பு இயக்கம் குறித்த புரிதல்.
தட்டுத் தடுமாறி வாசிக்கும் குழந்தைகளைத் தன்னம்பிக்கையோடு வாசிக்க வைப்பது தான் வாசிப்பு இயக்கத்தின் நோக்கம்; கொண்டாட்ட ரசனையை உருவாக்குவதல்ல; எழுதியவரை எழுத்தைக் கொண்டாடுவதல்ல நோக்கம்.
02 சிந்திக்க -உரையாட- குழந்தைகளைப் படைப்பாளிகள் ஆக்க தூண்டும் ரசனைதான் நோக்கம்.
மேலும் வாசிக்க கீழே உள்ள லிங்கை Click செய்யவும் CLICK HERE TO DOWNLOAD பள்ளிக் கல்வித் துறை - வாசிப்பு இயக்கக் கையேடு PDF
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.