ஜுலை -18 "தமிழ்நாடு நாள்" விழா.. பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் - முதல் பரிசு: ரூ.10,000 - தமிழ்நாடு அரசு அறிவிப்பு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 5 يوليو 2024

ஜுலை -18 "தமிழ்நாடு நாள்" விழா.. பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் - முதல் பரிசு: ரூ.10,000 - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!



ஜுலை -18 "தமிழ்நாடு நாள்" விழா..!*

*தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி* *மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.*

*முதல் பரிசு: ரூ.10,000*

*இரண்டாம் பரிசு: ரூ.7,000*

*மூன்றாம் பரிசு: ரூ.5,000*

*- தமிழ்நாடு அரசு அறிவிப்பு!* செய்தி வெளியீடு எண்: 909

செய்தி வெளியீடு

: 03.07.2024

சூலை 18 தமிழ்நாடு நாள் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை.

பேச்சுப்போட்டி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தாய்த் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு 61601 பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயர் சூட்டிய சூலை 18 ஆம் நாளினை "தமிழ்நாடு நாளாக" கொண்டாடப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டது. இவ்வறிவிப்பிற்கிணங்க 2022ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு நாள் விழா சிறப்பாக கொண்டாப்பெற்று வருகிறது.

தமிழ்நாடு நாள் விழா தொடர்பில் அனைத்து மாவட்டங்களிலும், 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தி முதல் மூன்று பரிசுகள் மாவட்ட அளவில் வழங்கப்பெறுவதுடன் முதல் பரிசு பெறும் மாணவர் சென்னையில் நடைபெறும் மாநிலப் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பினை பெறுவர். சென்னையில் நடைபெறும் மாநிலப் போட்டியில் கலந்து கொண்டு முதல் மூன்று இடம் வகிக்கும் மாணவர்களுக்கு சூலை 18 ஆம் நாளன்று நடைபெறும் தமிழ்நாடு நாள் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிச் சிறப்பிக்கப் பெற்று வருகின்றனர். சென்னை மாவட்ட அளவில் நடைபெறும் மாவட்டப் போட்டி 09.07.2024 அன்று சென்னை, அண்ணாசாலையில் அரசினர் மதரசா ஐ ஆஜம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளன.

இப்போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10,000/- இரண்டாம் பரிசு ரூ.7,000/-. மூன்றாம் பரிசு ரூ.5,000/- மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிச் சிறப்பிக்கப்பெறுவர்.

போட்டிகளுக்கான தலைப்புகள்



ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.