அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களை வரன்முறைப்படுத்த காலஅவகாசம் நீட்டிப்பு.
அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களை வரன்முறைப்படுத்துதல் - 31.01.2025 வரை கால நீட்டிப்பு செய்து அரசாணை வெளியீடு - TN அரசு செய்தி வெளியீடு!
செய்தி வெளியீடு எண்: 1091
: 31.07.2024
செய்தி வெளியீடு திட்டமில்லா பகுதிகளில் 01.01.2011-ற்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களுக்கு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பாக 01.08.2024 முதல் 31.01.2025 வரை 6 மாத காலம் கால நீட்டிப்பு செய்து அரசாணை எண்.76, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் (நவ(3)) துறை நாள்.14.06.2018-ல் மாற்றமின்றி அரசு கடிதம் (நிலை) எண்.122/நவ4(1)/2024, நாள்.25.06.2024-ல் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு கட்டப்பட்டுள்ள அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்கள் மலையிடப் பகுதியில் (HACA) அமையும் பட்சத்தில் அரசு கடிதம் எண்.15535/நவ4(3)/2019, நாள்.18.02.2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வழிமுறைகளை பின்பற்ற தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tcp.org.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. மேலும், இந்த இறுதி வாய்ப்பினை தவறாது பயன்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.