“11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் 14ம் தேதி வெளியிடப்படும்”-அரசு தேர்வுகள் இயக்குனர் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 11 مايو 2024

“11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் 14ம் தேதி வெளியிடப்படும்”-அரசு தேர்வுகள் இயக்குனர்

“11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் 14ம் தேதி வெளியிடப்படும்”-அரசு தேர்வுகள் இயக்குனர் "The results of the students who wrote the 11th general examination will be published on the 14th" - Director of Government Examinations

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6 2023-2024- ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வு முடிவுகள் - புள்ளி விவரங்கள் அடங்கிய பகுப்பாய்வு அறிக்கை ஊடகங்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளக் கோருதல் - தொடர்பாக.

மார்ச் - 2024, மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதிய தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 14.05.2024 (செவ்வாய்கிழமை) அன்று காலை 9.30 மணிக்கு பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசுத் தேர்வுகள் இயக்கத்தில் வெளியிடப்படவுள்ளது. இத்தேர்வு தொடர்பான புள்ளி விவரங்கள் அடங்கிய பகுப்பாய்வு அறிக்கையினை ஊடகவியலாளர்கள் www.dge.tn.nic.in என்ற இணையதளம் வழியாக காலை 9.40 மணிமுதல் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், மின்னஞ்சல் மூலமும் அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.