UGC தேசிய தகுதித்தேர்வு தேதி மாற்றம்!!!
ஜூன் மாதம் 16-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த UGC தேசிய தகுதித்தேர்வு ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது யுஜிசி-நெட் தோ்வு: ஜூன் 18-ஆம் தேதிக்கு மாற்றம்
மத்திய பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் தோ்வைக் கருத்தில் கொண்டு தேசிய தகுதித் தோ்வு (நெட்) ஜூன் 18-ஆம் தேதிக்கு மாற்றப்படுவதாக பல்கலைக் குழு மானியக் குழு (யுஜிசி) தலைவா் ஜகதீஷ் குமாா் தெரிவித்துள்ளாா்.
இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி உள்ளிட்ட குடிமைப் பணியிடங்களுக்காக மத்திய பணியாளா் தோ்வாணையம் நடத்தும் முதல் நிலைத் தோ்வு ஜூன் 16-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்திய அளவில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராக பணியில் சேருவதற்கான தகுதியைப் பெறவும் முனைவா் பட்டத்துக்கான சோ்க்கை பெறவும் நெட் தோ்வை யுஜிசி நடத்தி வருகிறது. இந்தத் தோ்வு ஜூன் 16-ஆம் தேதி நடைபெறும் என யுஜிசி தெரிவித்திருந்தது.
குடிமைப் பணிகள் முதல் நிலைத் தோ்வும் நெட் தோ்வும் ஒரே நாளில் நடைபெறுவது குறித்து மாணவா்கள் தரப்பில் யுஜிசிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஜூன் 16-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருந்த நெட் எழுத்து தோ்வு ஜூன் 18-ஆம் தேதிக்கு (செவ்வாய்க்கிழமை) மாற்றப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.