அரசாணை 243-க்கு ஆசிரியர்கள் ஆதரவு என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு - ஆசிரியர்களுக்கான பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு விண்ணப்பங்கள் விவரம்... - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 19 مايو 2024

அரசாணை 243-க்கு ஆசிரியர்கள் ஆதரவு என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு - ஆசிரியர்களுக்கான பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு விண்ணப்பங்கள் விவரம்...



அரசாணை 243-க்கு ஆசிரியர்கள் ஆதரவு என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு - ஆசிரியர்களுக்கான பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு விண்ணப்பங்கள் விவரம்... Notification of the School Education Department in support of Ordinance 243 by the teachers - Details of applications for general transfer consultation for teachers

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கான பொது பணியிட மாறுதல் கலந்தாய்விற்கு இதுவரை 63,000 ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதுவரை, தொடக்கக் கல்வித்துறையில் 26,075 ஆசிரியர்களும், பள்ளிக் கல்வித்துறையில் 37,358 ஆசிரியர்களும் பொதுக் கலந்தாய்விற்கு விண்ணப்பித்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

அரசாணை 243 இன்படி, தொடக்கக் கல்வித் துறையில் மாநில அளவிலான அலகு நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு நடத்தப்படும் முதல் கலந்தாய்வுக்கு, ஒன்றியத்திற்குள் மாறுதல் கோரும் எண்ணிக்கையை விட ஒன்றியத்திற்கு வெளியே (கல்வி மாவட்டத்திற்குள் / வருவாய் மாவட்டத்திற்குள் / மாவட்டம் விட்டு மாவட்டம்) அதிக அளவு எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. *MHM:*

ஒன்றியத்திற்குள் : 41%

ஒன்றியத்திற்கு வெளியே : 59%

*PHM:*

ஒன்றியத்திற்குள் : 68%

ஒன்றியத்திற்கு வெளியே : 32%

*BT:*

ஒன்றியத்திற்குள் : 37%

ஒன்றியத்திற்கு வெளியே : 63% *SGT:*

ஒன்றியத்திற்குள் : 43%

ஒன்றியத்திற்கு வெளியே : 57%

*Overall:*

ஒன்றியத்திற்குள் : 45%

ஒன்றியத்திற்கு வெளியே : 55%

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.