தேர்தல் பணி புறக்கணித்தோருக்கு பள்ளிக்கல்வி துறை 'நோட்டீஸ் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 2 مايو 2024

தேர்தல் பணி புறக்கணித்தோருக்கு பள்ளிக்கல்வி துறை 'நோட்டீஸ்

தேர்தல் பணி புறக்கணித்தோருக்கு பள்ளிக்கல்வி துறை 'நோட்டீஸ்

லோக்சபா தேர்தல் ஓட்டுச்சாவடி பணியை புறக்கணித்த ஆசிரியர்கள் அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழகம், புதுச்சேரியில், 40 தொகு திகளுக்கும் லோக்சபா தேர்தல் ஏப்., 19ம் தேதி நடந்தது.

இந்த தேர்தலில், மாநிலம் முழுதும் ஓட்டுச்சாவடி பணி களுக்கு, பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசி ரியரல்லாத பணியாளர்கள், கல்வி அதிகாரிகள், வருவாய் துறையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதில், ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளில் சிலர், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை கடைசி நேரத்தில் புறக்கணித்தனர்.

இதையடுத்து, அவசர அவசரமாக மாற்று ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். மாவட்டம் , வாரியாக ஓட்டுச்சாவடி பணிகளை புறக்கணித்தவர்களின் விபரங்கள், கலெக்டர் அலுவலகங்களில் இருந்து பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இதையடுத்து, ஓட்டுச்சாவடி பணியை புறக்கணித்தவர்களுக்கு, மாவட்ட கல்வி அதிகாரிகள் வழியே விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பும் பணி துவங்கியுள்ளது. தேர்தல் ஆணைய விதிகளுக்கு உட்பட்டு, பணி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தேர்தல் பணியை புறக்கணித்த காரணம் என்ன? இதற்காக தங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என விளக்கம் பட்டுள்ளது

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.