சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது - அரசு உத்தரவை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை - பள்ளி கல்வித்துறை இயக்குநர் எச்சரிக்கை
கடுமையான வெப்பம் வீசக்கூடிய நிலையில் சிறப்பு வகுப்புகளை நடத்தக் கூடாது
அரசு உத்தரவை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - பள்ளி கல்வித்துறை இயக்குனர் அறிவொளி எச்சரிக்கை
Video News - Click here
அரசின் உத்தரவை மீறி பல்வேறு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடைபெறுவதாக புகார்
மாவட்ட கல்வி அதிகாரிகள் இந்த விவகாரத்தில் சிறப்பு கவனம் செலுத்துமாறு அறிவுரை
பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் நேற்று எச்சரிக்கை விடுத்த நிலையில், தற்போது இயக்குனர் அதிரடி அறிக்கை
சுற்றறிக்கை
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் வணக்கம்.
தமிழக அரசு கோடை விடுமுறை அனைத்துப் பள்ளிகளுக்கும் அறிவித்தப் பின்னரும் பல்வேறு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. கடுமையான வெப்பம் நிலவும் இக்காலத்தில் கட்டாயமாக சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று தங்களது ஆளுகைக்குட்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். மீறி சிறப்பு வகுப்புகள் எடுக்கும் பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.இதில் அனைத்துக் கல்வி அலுவலர்களும் சிறப்புக் கவனம் செலுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
الجمعة، 3 مايو 2024
New
அரசு உத்தரவை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை - பள்ளி கல்வித்துறை இயக்குநர் எச்சரிக்கை
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.