Election Mock Poll - மாதிரி வாக்குப்பதிவு (MOCK POLL) - Steps! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, April 14, 2024

Election Mock Poll - மாதிரி வாக்குப்பதிவு (MOCK POLL) - Steps!



Election Mock Poll - Steps! - மாதிரி வாக்குப்பதிவு (MOCK POLL)

STEP-1 காலை 5.30 மணிக்கு 2 அல்லது அதற்கு மேற்பட்ட முகவர்கள் மற்றும் நுண்பார்வையாளர் (Micro Observer) முன்னிலையில் Mock Poll தொடங்குதல்

STEP-2 முகவர்கள் எவரும் இல்லை எனில் 15 நிமிடங்கள் மட்டும் காத்திருந்து தொடங்கவேண்டும்.

STEP-3 CU-வை PO3-யின் மேசையிலும் BU & VVPAT-ஐ வாக்கு செலுத்தும் மேசையிலும் வைக்கவும். Mock Poll-க்கு பின்னர் அவற்றை இடம் மாற்றக்கூடாது.

STEP-4 BU2 → BU1 → VVPAT CU- Cable- VVPAT- Unlock ພໍ (Vertical Position)

STEP-5 VVPAT காலியாக இருப்பதைக் காட்டியப் பின்னர் CU-வை ON செய்யவும்.

STEP-6 CU-வில் Total Button-ஐ அழுத்தி "0" பூஜ்ஜியம் உள்ளதை முகவர்களிடம் காண்பிக்கவும்

STEP-7 அனைத்து வேட்பாளர்கள் (NOTA உட்பட) குறைந்தது ஒரு வாக்கு வீதம் குறைந்தது 50 வாக்குகளைப் பதிவு செய்தல்

STEP-8 CU-வில் CLOSE மற்றும் RESULT பட்டனை முறையே அழுத்தி வாக்குகளின் எண்ணிக்கையை சரிபார்த்தல்.

STEP-9 VVPAT-ல் Slip-களை வெளியே எடுத்து CU-வில் வரும் எண்ணிக்கையும் VVPAT Slip எண்ணிக்கையும் சமமாக இருப்பதை உறுதி செய்தல்

STEP-10 CU-வில் உள்ள Clear பட்டனை அழுத்தி மாதிரி வாக்குப்பதிவின்போது பதிவான வாக்குகளை முகவர்கள் முன்னிலையில் அழித்தல். STEP-11 VVPAT Slip-களின் பின்புறம் "Mock Poll Slip" என்ற முத்திரையிடுதல்

STEP-12 கருப்பு நிற உறையில் சீலிட்டு தனி பிளாஸ்டிக் பெட்டியில் வைத்து "Pink Paper Seal” கொண்டு சீலிட்டு அதில் PO மற்றும் முகவர்கள் கையொப்பமிடவேண்டும்.

STEP-13 CU-வை Switch off செய்துவிட்டு Green Paper Seal-ல் உள்ள 1.Green Colour - Result Button, 2.Pink Colour - Print Button- வருமாறு வைத்து Inner Result Section-ஐ Special Tag-னைக் கொண்டு Close Button தெரியுமாறு சீலிடவேண்டும். Presiding Officer மற்றும் முகவர்கள் Green Paper Seal & Special Tag-ல் கையொப்பமிடவேண்டும்.

STEP-14 Outer Result Section- Address Tag- Green Paper Seal-ல் உள்ள A-வை ஒட்டிய பிறகு B-யை ஒட்டவேண்டும்.

STEP-15 VVPAT Compartment காலியாக இருப்பதை முகவர்களிடம் காண்பித்து நூல் மற்றும் Address Tag-உடன் இணைத்து சீலிடுதல்

STEP-16 மாதிரி வாக்குப்பதிவு சான்றில் வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் முகவர்கள் கையொப்பமிடுதல் (Annexure-27)

STEP-17 CU-வில் Total Button-ஐ அழுத்தி "0" உள்ளதை உறுதி செய்தல்

STEP-18 வாக்குப்பதிவை குறித்தநேரத்தில் தொடங்கி (7 A.M.) முதல் வாக்காளர் PO-1 "Total in the Control Unit checked and found to be Zero" என 17A பதிவேட்டில் எழுதவேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.