கவுரவ விரிவுரையாளர்களை உதவி பேராசிரியர்களாக நியமனம் செய்யும் விவகாரம்: தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 7 أبريل 2024

கவுரவ விரிவுரையாளர்களை உதவி பேராசிரியர்களாக நியமனம் செய்யும் விவகாரம்: தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு



கவுரவ விரிவுரையாளர்களை உதவி பேராசிரியர்களாக நியமனம் செய்யும் விவகாரம்: தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு Appointment of Honorary Lecturers as Assistant Professors: High Court order to Tamil Nadu Govt

தேர்வு நடைமுறைகளை 12 வாரங்களில் முடிக்க தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது,

கவுரவ விரிவுரையாளர்களை உதவி பேராசிரியர்களாக பணி நிரந்தரம் செய்வது தொடர்பான தேர்வு நடைமுறைகளை, 12 வாரங்களில் முடிக்க தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு, அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றியவர்களை, உதவி பேராசிரியர்களாக நியமனம் செய்ய அரசாணை பிறப்பிக்கப்பட்டு, நேர்முகத்தேர்வு வரை நடைபெற்றது. ஆட்சி மாற்றம் காரணமாக, இந்த நடைமுறைகள் நிறுத்தப்பட்டு, நான்காயிரம் உதவி பேராசிரியர்கள் தேர்வு தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

விரிவுரையாளர்கள் தரப்பில் புதிய அறிவிப்புக்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன் 1,146 கவுரவ விரிவுரையாளர்களை உதவிப் பேராசிரியர்களாக பணி நிரந்தரம் செய்வது தொடர்பான தேர்வு நடைமுறைகளை, 12 வாரங்களில் முடிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.