வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு 07.04.2024 அன்று 2-ம் கட்ட பயிற்சி வகுப்பு - மாவட்ட ஆட்சியர்
ந.க.எண்:2776/2023/எ.6
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மயிலாடுதுறை
: 01.04.2024
அறிவிப்பு
2024 மக்களவை தொகுதிக்களுக்கான பொதுத் தேர்தலை முன்னிட்டு, 28. மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கு வாக்குச் சாவடியில் பணிபுரிந்திட நியமனம் செய்யப்பட்டுள்ள வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு 07.04.2024 அன்று 2-ம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
இந்நிலையில் கீழ்கண்ட அறிவுரைகள் வழங்கப்படுகிறது:
1. இப்பயிற்சியில் கலந்து கொள்ளவிருக்கும் அனைத்து வாக்குச் சாவடி அலுவலர்களும், பயிற்சி நாளன்று காலை சரியாக 09.30 மணிக்கு பயிற்சி அறையில் இருக்கவேண்டும்.
2. 09.30 மணிக்கு பிறகு பயிற்சிக்கு வருகை தரும் அலுவலர்கள் வருகைப் பதிவேட்டில் கையொப்பம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
3. பயிற்சி அலுவலர்கள் மதிய உணவு எடுத்து வரவேண்டும்.
4. உணவு இடைவேளைக்குப் பின்னர் குறிப்பிட்ட நேரத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டு தொடர்ந்து பயிற்சிகள் வழங்கப்படும். மேலும் மாதிரி வாக்குச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு செயல்முறை பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. மீண்டும் மாலை பயிற்சி வகுப்புகளுக்கு பிறகு வருகை பதிவேடு எடுத்த பின்பு தான் பயிற்சி நிறைவுறும்.
5. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின் படி பயிற்சி வகுப்புகளில் முழுமையாக கலந்து கொள்ளாத அலுவலர்கள் மற்றும் விதிமுறைகளை பின்பற்றாத அலுவலர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
الجمعة، 5 أبريل 2024
New
வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு 07.04.2024 அன்று 2-ம் கட்ட பயிற்சி வகுப்பு - மாவட்ட ஆட்சியர்
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.