எண்ணும் எழுத்தும் கையாளும் ஆசிரியர்களுக்கு இணைய வழி பயிற்சி தேதிகள் அறிவிப்பு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 4 مارس 2024

எண்ணும் எழுத்தும் கையாளும் ஆசிரியர்களுக்கு இணைய வழி பயிற்சி தேதிகள் அறிவிப்பு.



எண்ணும் எழுத்தும் கையாளும் ஆசிரியர்களுக்கு இணைய வழி பயிற்சி தேதிகள் அறிவிப்பு. Notification of Online Training Dates for Literacy Teachers.

1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை கையாளும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் குறுவள மைய Online training - சார்ந்து இயக்குநரின் செயல்முறைகள்.... 1 முதல் 3ஆம் வகுப்பு கற்பிக்கும் அனைத்துப் பள்ளி ஆசிரியர்களும் இப்பயிற்சியினை 05.03.2024 முதல் 13.03.2024 முடிய இணைய வழியில் எடுத்துக் கொள்ளும் வகையில் பயிற்சிக்கான கட்டகங்கள் ஆசிரியர்களின் பார்வைக்கு இருக்கும். ஆசிரியர்கள் இப்பயிற்சியினை மேற்குறிப்பிட்ட தேதிக்குள் ஒன்று அல்லது இரண்டு நாட்களில் எடுத்து முடித்த பின்பு பயிற்சி மதிப்பீட்டினை (Training Assessment) மேற்கொள்ள வேண்டும்.

மேலும், 4 மற்றும் 5ஆம் வகுப்பு கற்பிக்கும் அனைத்து பள்ளி ஆசிரியர்களும் இப்பயிற்சியினை 06.03.2024 முதல் 14.03.2024 முடிய இணைய வழியில் மேற்கொள்ளும் வகையில் பயிற்சிக்கான கட்டகங்கள் ஆசிரியர்களின் பார்வைக்கு இருக்கும். ஆசிரியர்கள் இப்பயிற்சியினை மேற்குறிப்பிட்ட தேதிக்குள் ஒன்று அல்லது இரண்டு நாட்களில் எடுத்து முடித்த பின்பு பயிற்சி மதிப்பீட்டினை (Training Assessment) மேற்கொள்ள வேண்டும்.

மேற்கண்ட இப்பயிற்சியினை 1 மற்றும் 5ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களும் மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது CLICK HERE TO DOWNLOAD பயிற்சிக்கான தேதிகள் PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.