மிரட்டிய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை: கலெக்டரிடம் பள்ளி மாணவி புகார் Action against threatening teachers: School girl complains to collector
போக்சோ புகார் அளிக்கவிடாமல் தடுத்து, மிரட்டிய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பள்ளி மாணவி நேற்று கலெக்டர் அலுவலகத்தில், புகார் மனு அளித்தார்.
தொண்டாமுத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட ஒரு பள்ளியின், உடற்கல்வி ஆசிரியர் ஆனந்தகுமார். இவர் மீது, மாணவி ஒருவர் அளித்த பாலியல் தொந்தரவு புகார் அடிப்படையில், போக்சோ வழக்கின் கீழ், சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.போலீசாரிடம் புகார் அளிப்பதற்கு முன்பு, கடந்தாண்டு ஏப்ரல் மாதம், தலைமையாசிரியை ஜீவாஹட்சனிடம், பாதிக்கப்பட்ட மாணவி பெற்றோருடன் சென்று புகார் அளித்துள்ளார். அப்பள்ளியில் பணிபுரியும் சில ஆசிரியர்களிடமும், உடற்கல்வி ஆசிரியர் குறித்து, புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இவர்கள் யாரும், உரிய உடற்கல்வி ஆசிரியர் ஆனந்தகுமாரை கண்டிக்காமல், பாதிக்கப்பட்ட மாணவியை, புகார் அளிக்கவிடாமல் மிரட்டியதாகவும், திட்டியதாகவும், போலீசாரிடம் மாணவி வாக்குமூலம் அளித்துள்ளார்.
இருப்பினும், மிரட்டிய 10 ஆசிரியர்கள் மீது, எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், தன்னை மிரட்டிய அனைத்து ஆசிரியர்கள் மீதும், நடவடிக்கை எடுக்குமாறு, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, மாணவி புகார் அளித்துள்ளார்.முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளியிடம் கேட்டபோது, புகார் மனு பற்றி விசாரிக்கப்படும் என்றார்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.