நாளை (03.02.2024, சனிக்கிழமை) பள்ளிகளுக்கு முழு வேலைநாள் - DEO - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 2 فبراير 2024

நாளை (03.02.2024, சனிக்கிழமை) பள்ளிகளுக்கு முழு வேலைநாள் - DEO



நாளை (03.02.2024, சனிக்கிழமை) பள்ளிகளுக்கு முழு வேலைநாள்

நாளை (03.02.2024, சனிக்கிழமை) திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகளுக்கு முழு வேலைநாளாகும்.

திருவண்ணாமலை மாவட்டக் கல்வி அலுவலரின் (தொடக்கக்கல்வி) செயல்முறைகள்,

பொருள்:

தொடக்கக்கல்வி திருவண்ணாமலை கல்வி மாவட்டம - 03.02.2024 அன்று பள்ளி வேலை நாளாக செயல்படுதல் - ஆணைகள் வழங்குதல் சார்பாக. திருவண்ணாமலை கல்வி மாவட்டம், தொடக்கக்கல்வி நிருவாகத்தின் கீழ் இயங்கும் அனைத்து வகை தொடக்க / நடுநிலைப்பள்ளிகளுக்கு 03.02.2024 சனிக்கிழமை அன்று பள்ளி வேலை நாளாக செயல்படும் என அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவி தொகை திட்ட தேர்வு (NMMS) 03.02.2024 அன்று நடைபெறும் நிலையில் தேர்வுக்கு மாணவர்களை முன்னதாக தேர்வு மையத்திற்கு பாதுகாப்பாக அழைத்து சென்று வர சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் பொறுப்பாசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்குமாறு அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.