அனைத்து வகை பள்ளிகளுக்கும் நாளை 17.02.2024 சனிக்கிழமை பணி நாள் - CEO செயல்முறைகள்
விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் 16.02.2024 பொருள்
: பள்ளிக் கல்வி - விழுப்புரம் மாவட்டம் - மழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டது விடுமுறையினை ஈடு செய்யும் வகையில் அனைத்து வகை பள்ளிகளுக்கும் 17.022024 சனிக்கிழமை அன்று பணி நாளாக செயல்பட ஆணையிடுதல் தொடர்பாக.
விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் மழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டதன் காரணமாக, அவ்விடுமுறையினை ஈடு செய்யும் பொருட்டு 17.02.2024 சனிக்கிழமை அன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் பணி நாளாகும். எனவே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளும் புதன்கிழமை கால அட்டவணையினை பின்பற்றி பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட வேண்டும் என அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு வழக்கம் போல் நாளை 17 ம் தேதி பள்ளி வேலை நாள் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிக்கை

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.