SSLC பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்வெண்ணுடன் கூடிய பெயர்ப்பட்டியல் பதிவிறக்கம் செய்தல் சார்ந்து DGE செயல்முறைகள்!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 20 فبراير 2024

SSLC பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்வெண்ணுடன் கூடிய பெயர்ப்பட்டியல் பதிவிறக்கம் செய்தல் சார்ந்து DGE செயல்முறைகள்!!



DGE Processes Dependent on Downloading SSLC Common Exam Candidates Name List with Roll Number!! SSLC பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்வெண்ணுடன் கூடிய பெயர்ப்பட்டியல் பதிவிறக்கம் செய்தல் சார்ந்து DGE செயல்முறைகள்!!

மார்ச் / ஏப்ரல் 2024 , பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணாக்கரின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கும் பொருட்டு . அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் 15.12.2023 முதல் 30.12.2023 வரையிலான நாட்களில் தங்களது பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் அனைத்து மாணாக்கர்களது விவரங்களையும் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்து , தேர்வுக் கட்டணத்தினையும் இணையதளம் வாயிலாக செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது . அதன் பின்னர் . பார்வை 2 - ல் காணும் 03.01.2024 நாளிட்ட இவ்வலுவலகக் கடிதத்தில் மேற்குறிப்பிட்ட பணிக்கான கால அளவு 05.01.2024 வரை நீட்டிப்பு செய்யப்பட்டது . தற்போது , மாவட்டக் கல்வி அலுவலர்கள் தங்களது ஆளுகைக்குட்பட்ட அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களும் 15.02.2024 பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று தங்கள் பள்ளிக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் வழங்கப்பட்டுள்ள USER ID மற்றும் Password- ஐ பயன்படுத்தி மார்ச் / ஏப்ரல் 2024 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கான தங்கள் பள்ளி மாணாக்கர்களின் தேர்வெண்ணுடன் கூடிய பெயர்ப்பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.