அகப்பயிற்சி நிறைவு செய்த 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஊக்கத் தொகை ரூ.1000 வழங்குதல் சார்ந்த வழிமுறைகள் -SPD proceedings - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, February 7, 2024

அகப்பயிற்சி நிறைவு செய்த 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஊக்கத் தொகை ரூ.1000 வழங்குதல் சார்ந்த வழிமுறைகள் -SPD proceedings



Procedures related to providing incentive amount of Rs.1000 to 12th class students who have completed internal training - SPD proceedings அகப்பயிற்சி நிறைவு செய்த 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஊக்கத் தொகை ரூ.1000 வழங்குதல் சார்ந்த வழிமுறைகள் -SPD proceedings

பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்கள் செயல்முறையின் படி அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவில் பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 10 நாட்கள் அகப்பயிற்சியினை ( Internship ) மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டது. அதற்கான நிதி பார்வை 2 யிலுள்ள இவ்வலுவலகக் கடிதத்தின் படி அனைத்து மாவட்டங்களுக்கும் விடுவிக்கப்பட்டது . பார்வை 1 யிலுள்ள செயல்முறையில் தெரிவிக்கப்பட்டதின்படி அகப்பயிற்சியினை நிறைவு செய்துள்ள மாணவர்களுக்கு ஊக்கத்தொகை அவரவர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி அகப்பயிற்சி நிறைவு செய்த ஒவ்வொரு மாணவருக்கும் ரூ .1000 / - ஊக்கத்தொகையாக அவர்கள் வங்கி கணக்கில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது . இதற்காக அகப்பயிற்சி நிறைவு செய்த 12 ஆம் வகுப்பு மாணவர்களின் வங்கி கணக்கு விவரம் பெறப்பட வேண்டும். மாணவர்களின் வங்கிக்கணக்கு விவரம் மற்றும் அகப்பயிற்சிக்கு சென்ற தொழிற்சாலைகள் / நிறுவனங்கள் வழங்கிய சான்றிதழ்களை tnemis.tnschools.gov.in இணையதளத்தில் பதிவேற்றம் பதிவேற்றம் செய்வதற்கான வழிவகை 1 செய்யப்பட்டுள்ளது. இவ்விவரங்களை ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் tnemis.tnschools.gov.in இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் . பதிவேற்றம் செய்வதற்கான வழிமுறைகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

SPD Proceedings

CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.