மருத்துவக்கல்லூரி படிப்பு இலவசம் ; அமெரிக்காவின் புகழ்பெற்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கல்லூரி அறிவிப்பு. Medical college education is free; Announcement of famous Albert Einstein College of USA.
நியூயார்க்: அமெரிக்காவில் புகழ்பெற்ற நியூயார்க் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு இனி கட்டணம் வசூலிக்கப்படாது என்று அறிவித்துள்ளது.
மேலும் தற்போதைய 4 ம் ஆண்டு மாணவர்களின் கல்வி கட்டணமும் திரும்ப தரப்படும் என்றும் கூறியுள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கல்லூரி விழா ஒன்றில் பேசிய ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் நிறுவனத்தின் பொருளாளர் இதனை தெரிவித்தார். இவர் ஒரு பில்லியன் டாலர் நன்கெடை வழங்குவதாக தெரிவித்தார்.
இந்த கட்டண பீரீ அறிவிப்பை கேட்டதும் மாணவர்கள் துள்ளி குதித்து கரகோஷம் எழுப்பினர். பல மாணவர்கள் ஆனந்த கண்ணீர் விட்டனர்.
அமெரிக்க வரலாற்றில் இது போன்ற உயர்வான நன்கொடை இதுவரை யாரும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.