குழந்தையின் பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழ் பெற 31-12-2024 வரை கால அவகாசம் - மாவட்ட பிறப்பு இறப்பு பதிவாளர் கடிதம்
பிறப்பு இறப்பு பதிவு பணிகள் கரூர் மாவட்டம் குழந்தையின் பெயரின்றி பிறப்பு பதிவு செய்யப்பட்டதில் குழந்தை பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழ் பெற - 31:122024 வரை மத்திய அரசு கால அவகாசம் வழங்கியுள்ளது குறித்து பொது மக்களிடையே தகவல் தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட தெரிவித்தல் தொடர்பாக.
பார்வை:
இயக்குநர், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை, சென்னை भां कनीनंा कप5 B.क. वा. न. 8732/SBHI-I/S1/2014, ((0)) बी.02.09.2023
பார்வையில் காணும் கடிதத்தின்படி, குழந்தையின் பெயர் பதிவு செய்யாமல் பிறப்பு பதிவு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகளில், குழந்தையின் பெயரை பதிவு செய்து பெயருடன் கூடிய பிறப்புச் சான்றிதழ் பெற 31.12.2024 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கால அவகாசம் இதற்கு மேல் நீட்டிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தங்களது நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவரும் பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு வருகை தரும் குழந்தைகளின் பெற்றோருக்கு மேற்படி தகவலைத் தெரிவித்து, தங்களது குழந்தைகளுக்கு பெயருடன் கூடிய பிறப்புச் சான்றிதழ் பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளத் தக்க வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்திடுமாறும், இது குறித்த அறிவிப்பினை தகவல் பலகையில் (Sticker/ Notice) பொதுமக்கள் பார்வையில்படுமாறு வைக்க அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் அங்கன்வாடி மையபணியாளர்களுக்கு அறிவுறுத்துமாறு கனிவுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.