அரசு ஊழியர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்க அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு கோரிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 5 يناير 2024

அரசு ஊழியர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்க அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு கோரிக்கை



ஊடகம் மற்றும் பத்திரிகை செய்தி ~~~~~

அரசு ஊழியர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நிறுவனத் தலைவர் - சா.அருணன் கோரிக்கை ~~~~~~~

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை மிக சிறப்பாக கொண்டாட ரூ.1000/- யுடன் பொங்கல் தொகுப்பு அடங்கிய பரிசு வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார் இதனை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வரவேற்று நன்றியைத் தெரிவித்து கொள்கிறது அதேநேரத்தில் அரசு ஊழியர்களுக்கு இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது அரசு ஊழியர்கள் பல அரசு ஊழியர்கள் வீடுக்கட்டுவதானாலும் தன்பிள்ளைகளை படிக்கவைப்பதானாலும் மகன் மற்றும் மகள் திருமணம் நடத்துவது என்றாலும் அத்தனை காரியங்களுக்கும் வட்டியுடன் கூடிய கடன் தொகையை முன்ப்பணமாக பெற்றும் போதுமானதாக இல்லாத பட்சத்தில் வங்கிகளில் தனிக்கடன் பெற்றும் குடும்பத்தை நடத்துகிறார்கள், இந்த நிலைத்தான் பெருபாலான அரசு ஊழியர்களின் நிலை ஆதலால் எப்போதும் போல் அரசு ஊழியர்களை உள்ளடக்கிய அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 1000/- துடன் பொங்கல் தொகுப்பை வழங்கிட இந்தியாவின் முன்மாதரி முதலமைச்சராக திகழும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்

மேலும் நிர்வாகிகள் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து மாலை பொன்னாடை அணிவித்து இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர் பிறகு புதிய உறுப்பினர்களுக்கான சந்தா புத்தகத்தை வழங்கப்பட்டது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் சா.அருணன்

நிறுவனத் தலைவர்

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.