மாணவராக மாறிய கமிஷனர் - 100 சதவீதம் மதிப்பெண் பெற அறிவுரை! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 1 ديسمبر 2023

மாணவராக மாறிய கமிஷனர் - 100 சதவீதம் மதிப்பெண் பெற அறிவுரை!



நீங்க பாடம் நடத்துங்க மேடம் - மாணவராக மாறிய கமிஷனர்!

குப்பக்கோணாம்புதுார் மாநகராட்சி பள்ளியில் மாணவர்களுடன் அமர்ந்து, பயிற்றுவிப்பு முறையை கவனித்த கமிஷனர், 100 சதவீதம் மதிப்பெண் பெற அறிவுரை வழங்கினார்.

மாநகராட்சி மேற்கு மண்டலம், 45வது வார்டுக்கு உட்பட்ட குப்பகோணாம்புதுார் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில், 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர்.

இப்பள்ளியில் நேற்று மதியம், 'விசிட்' செய்த மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், பத்தாம் வகுப்பு மாணவர்கள் பயிலும் வகுப்பறைக்கு சென்றார். அங்கு சமூக அறிவியல் பாடம் ஆசிரியர் நடத்திக்கொண்டிருக்க, மாணவர்கள் அருகே அமர்ந்துகொண்டார்.

ஆசிரியரை பாடம் நடத்தக்கூறிய அவர், முடிவில் மாணவர்களின் கல்வித்திறனை சோதனை செய்தார். பாடத்திட்டங்கள் குறித்து கேட்டறிந்ததுடன், பொதுத் தேர்வில், 100 சதவீதம் மதிப்பெண்கள் பெற வேண்டுமென, மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

முன்னதாக, பள்ளியில் உள்ள வருகை பதிவேடுகளை ஆய்வு செய்ததுடன், மாணவர்களுக்கு சமைக்கப்படும் உணவை சுவைத்து பார்த்தார்.

உதவி கமிஷனர் சந்தியா, மாநகராட்சி கல்வி அலுவலர் முருகேசன், கல்விக் குழு தலைவர் மாலதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.