இரண்டாம் பருவ விடுமுறை தகவல் : மாவட்டக் கல்வி அலுவலர் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 21 ديسمبر 2023

இரண்டாம் பருவ விடுமுறை தகவல் : மாவட்டக் கல்வி அலுவலர்



இரண்டாம் பருவ விடுமுறை தகவல் :

மாவட்டக்கல்வி அலுவலகம் (தொ.க) - அரூர்

அனைத்து அலுவலர்களுக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்

அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு இரண்டாம் பருவ விடுமுறை 23.12.2023 முதல் 01.01.2024 வரை அளிக்கப்படுகிறது. மீண்டும் பள்ளி திறக்கப்படும் நாள் : 02.01.2024

பருவ விடுமுறை நாட்களில் மூன்றாம் பருவத்திற்குரிய விலையில்லாப் பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டும்.

பள்ளி திறக்கப்பட்ட முதல்நாளில் அனைத்து மாணவர்களிடமும் புத்தகம் மற்றும் நோட்டுகள் வழங்கப்பட்டிருக்கவேண்டும். விடுமுறை நாட்களில் குளம், குட்டை, கிணறு, அறுந்த ஒயர் ஆகியவற்றிற்கு அருகே மாணவர்கள் செல்லக்கூடாது என்கிற அறிவுரைகளை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழங்கிட வேண்டும்.

விடுப்பு அளிப்பதற்கு முன்னர் பள்ளிகளில் உள்ளதண்ணீர் தொட்டிகளில் முழுமையாக தண்ணீர் வெளியேற்றம் செய்யப்பட வேண்டும்

உயர்தொழில்நுட்ப ஆய்வகத்திற்காக அனைத்துநடுநிலைப்பள்ளிகளிலும் ஒருவார காலத்திற்குள் இணைய வசதி ஏற்பாடு செய்துமுடித்திருக்கவேண்டும்.

தகவல்: மாவட்டக் கல்வி அலுவலர் அவர்கள் (தொ.க) அரூர்

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.