NMMS Exam Tamil Nadu 2024 Dates Announced - DGE Published - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, December 1, 2023

NMMS Exam Tamil Nadu 2024 Dates Announced - DGE Published



NMMS notification for 2023-24 - Nmms exam date 03/02/2024


சென்னை-6, அரசுத் தேர்வுகள் இயக்ககம் தேசிய வருவாய் - வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகைத் தேர்வு (NMMS) பிப்ரவரி 2024 அரசு பள்ளிகள் / அரசு உதவி பெறும் - பள்ளிகள் / மாநகராட்சி / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தேர்வு தொடர்பான அறிவுரைகள் வழங்கக் கோருதல் - சார்பு.

தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகை (NMMS) தேர்வு 03.02.2024 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் அரசு பள்ளிகள் / அரசு உதவி பெறும் பள்ளிகள் / மாநகராட்சி / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள், சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள் மூலம் இணையதளம் வாயிலாக விண்ணப்பப் படிவங்களை 04.12.2023 முதல் 19.12.2023 -க்குள் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தலைமை ஆசிரியர்களிடம் 19.12.2023 -க்குள் ஒப்படைக்க வேண்டும் என தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து அரசு பள்ளிகள் / அரசு உதவி பெறும் பள்ளிகள் / மாநகராட்சி / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்குமாறும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்களுக்கு உரிய அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், இத்துடன் இணைத்தனுப்பப்படும் அறிவிப்பினையும் அனைத்து அரசு பள்ளிகள் / அரசு உதவி பெறும் பள்ளிகள் / மாநகராட்சி / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இயக்குநர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.