பணி நிரவல் கலந்தாய்வு ஒத்திவைக்க ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 16 نوفمبر 2023

பணி நிரவல் கலந்தாய்வு ஒத்திவைக்க ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்



பணி நிரவல் கலந்தாய்வு ஒத்திவைக்க ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்

அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு நவ.,20ல் நடக்க உள்ள பணிநிரவல் கலந்தாய்வை ஒத்திவைக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளருக்கு பட்டதாரி கூட்டமைப்பு பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மண்ட் கடிதம் அனுப்பியுள்ளார்.

கடிதத்தில் கூறியிருப்பதாவது:

பட்டதாரி ஆசிரியர்களுக்கு நவ.,20ல் அறிவிக்கப்பட்டுள்ள பணிநிரவல் கலந்தாய்வு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு, உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு இரு ஆண்டுகளாக வழங்கவில்லை.

இப்பதவி உயர்வு வழங்கினாலே பெரும்பாலான பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் குறைய வாய்ப்புள்ளது.

தற்போது அரையாண்டு தேர்வுகள் துவங்க உள்ள நிலையில் பணிநிரவல் கலந்தாய்வு நடத்தினால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

மாணவர்கள் நலன் கருதி கலந்தாய்வை ஒத்தி வைக்க வேண்டும்.

பதவி உயர்வு வழங்கிய பிறகு கலந்தாய்வு நடத்த வேண்டும் என கோரியுள்ளார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.