தீபாவளி மறுநாள் 13.11.2023 அன்று பொது விடுமுறை நாளாக அறிவிக்க தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு (TNGTF) முதலமைச்சருக்கு கோரிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 6 نوفمبر 2023

தீபாவளி மறுநாள் 13.11.2023 அன்று பொது விடுமுறை நாளாக அறிவிக்க தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு (TNGTF) முதலமைச்சருக்கு கோரிக்கை

தீபாவளி மறுநாள் 13.11.2023 அன்று பொது விடுமுறை நாளாக அறிவிக்க தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு (TNGTF) முதலமைச்சருக்கு கோரிக்கை

தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வருவதால், தொலைதூரம் பயணிக்கும் பொதுமக்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் மாணவர்கள் நலன் கருதி 13.11. 2023 திங்கட்கிழமை பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் - மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு (TNGTF)

பொருள்: தீபாவளி திருநாள் கொண்டாட்டம் கூடுதலாக விடுமுறை வேண்டுதல் - சார்பாக,

இந்த ஆண்டு தீபாவளி திருநாள் எதிர்வரும் 12.11.2023 (ஞாயிறு) அன்று வருகின்றது. தீபாவளி திருநாள் கொண்டாட்டத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும் பல லட்சக்கணக்கான மக்கள் இடப்பெயர்வடைவார்கள். தீபாவளி நோன்பு 12.11.2023 அன்று கொண்டாடப்படுகிறது. ஆசிரியர்கள் அரசு அலுவலர்கள், மாணவர்கள் சொந்த ஊரிலிருந்து ஞாயிற்றுக் கிழமை இரவே புறப்பட வேண்டி உள்ளது. அனைவரும் குடும்பத்துடன் ஒரு நாள் கூடுதலாக செலவிடும் வகையில் 13.11. 2023 (திங்கள்) அன்று தமிழ்நாடு அரசு பொது விடுமுறை நாளாக அறிவித்து உதவிடுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.