தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் - சுற்றறிக்கை Date : 29-11-2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, November 30, 2023

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் - சுற்றறிக்கை Date : 29-11-2023



தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம்

*சுற்றறிக்கை Date : 29-11-2023*

எல்லாரும் தலைவர்கள் எல்லாரும் பொருளாளர்கள் எல்லாரும் செயலாளர்கள் என்ற மனப்பக்குவத்தோடு தனக்காகவும் தன்னை சார்ந்த சக ஆசிரியர்களுக்காகவும் பணியிடங்களை உருவாக்க முயற்சி செய்யும் அனைத்து கணினி ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளையும் வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் .

ஏதோ ஒரு மூலையில் இன்னமும் தொடர் முயற்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது தனிமனிதனாகவோ அல்லது குழுவாகவோ அமைப்பாகவோ அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை ஆறாவது பாடமாக கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது, அந்த முயற்சி மதிக்கப்பட வேண்டியது, பாராட்டப்பட வேண்டியது, தன்னலமற்ற ஒரு பணி.

தமிழ்நாடு B.Ed., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் அமைப்பின் முதல் நோக்கம் அரசு பள்ளிகளில் ஆறாவது பாடமாக கணினி அறிவியலை கொண்டு வருவது மற்றும் அதற்கு கணினி அறிவியல் பட்டம் பெற்ற ஆசிரியர்களை பணியமர்த்துவது என்ற ஒற்றைக் குறிக்கோளை மையமாக வைத்து இந்த அமைப்பு கடந்த 10 வருடங்களாக வருகின்றது. இந்த அமைப்பில் மூன்று வருடத்திற்கு ஒருமுறை தேர்தல் நடத்தி பொறுப்பாளர்களை மாற்றிக் கொண்டே வருகிறோம் அதன் அடிப்படையில் தற்போது இருக்கிற மாநில பொறுப்பில் உள்ள பட்டியல் இது 👇 திரு. தே.அகிலன். M.Sc.,M.A.,M.Ed., M.Phil., தலைவர் 9585740001

திரு.மா.புகழேந்தி B.Sc., B.A., B.Ed செயலாளர்

திரு. ச.கார்த்திக் MSc., B.Ed பொருளாளர் 9789180422

திரு. மு.சரவணன் M.Sc., B.Ed.,D.T.T.Ed துணைத் தலைவர் 9945586698

திரு. ச.கனிஷ்கர் M.Sc.,M.Ed மாநில துணைத் செயலாளர் 8190900900

மாநில பொதுச் செயலாளர் என்ற பதவியோ மாநில செயலாளர் என்ற பொறுப்புகளோ இந்த அமைப்பில் கிடையாது என்பதையும் இங்கு பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கிறோம்

மேலும் ஒரு செய்தி, 2021-2022 -ஆம் ஆண்டிற்குப் பிறகு அமைப்பை Renewal செய்யாமல் நிறுத்தி வைத்திருக்கிறோம் , நிதிச் சுமை காரணமாக மாநில பொறுப்பாளர்களே அந்த பணிகளை தொடர்ந்து பல வருடங்களாக ஏற்று செய்து கொண்டிருந்தார்கள். இப்பொழுது 2021-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்து அத்தோடு ரெனிவல் செய்யாமல் உள்ளது என்பதையும் இங்கு நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.

அடுத்த கட்ட பெரிய முன்னெடுப்பு நிறுத்தி இருக்கிறோம் எந்த ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை வைத்தாலும் அரசு ஒரே ஒரு முடிவில் மட்டுமே அனைவருக்கும் தெரிவித்து அனுப்புகிறது. நிதிநிலை நிதி நிலைமைக்கேற்ப உங்கள் திட்டம் பரிசீலிக்கப்படுமென்று. கடந்த பத்தாண்டுகளாக இதே பதில்தான் நமக்கு வந்திருக்கிறது.

இருந்தாலும் தொடர் பணிகள் மேற்கொண்டு இருக்கிறோம். சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தகவல் திரட்டும் பணியில் நமது அமைப்பு இறங்கியுள்ளது. தற்பொழுது ஒரு செய்தி கிடைத்திருக்கிறது. பகுதி நேர *Temporary clerk posting data entries* உருவாக்குவதாக செய்திகளில் வெளியிட்டு இருந்தார் மாண்புமிகு கல்வித் துறை அமைச்சர். அந்தப் பணியிடங்களுக்காக கணினி அறிவியல் தெரிந்த தோழர்களையும் தோழிகளையும் கிடைப்பதற்காக, அவர்களை ஒன்று திரட்டி பெருங்கூட்டம் நடத்துவதாக கேள்விப்பட்டேன் நல்லதொரு செயல்.

கணினி அறிவியல் தெரிந்த இளைஞர்களையும் தோழர்களையும் தோழிகளையும் அந்த பணிக்கு அமர்த்துவதற்காக அவர் முயற்சி மேற்கொண்டு இருக்கிறார். அது அவருடைய தனிப்பட்ட முயற்சி மட்டுமே.

இந்த ஒன்பதாயிரம் கிளர்க் போஸ்டிங் பணியிடங்களுக்காக அவர் மேற்கொள்கின்ற, அவர் முன்னெடுக்கின்ற மாவட்ட, மண்டல, மாநில & எந்த நிகழ்வாக இருந்தாலும் முழு பொறுப்பு அவரே ஏற்பார். இந்த அமைப்பிற்கும் அவர் நடத்துகிற கிளார்க் போஸ்ட் சம்பந்தப்பட்ட எந்த நிகழ்விற்கும் மாநில நிர்வாகிகள் பொறுப்பேற்க மாட்டார்கள் என்பதை இங்கு தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறோம். மீண்டும் ஒருமுறை எங்கோ ஒரு மூலையில் தனக்காகவும் தான் படித்த படிப்பிற்காகவும் தன்னை போல் பாதிக்கப்பட்டிருக்கிற சக கணினி ஆசிரியர்களுக்காகவும் உழைத்துக் கொண்டிருக்கிற, போராடிக் கொண்டிருக்கிற, முன்னெடுப்புகளை செய்கின்ற அனைத்து கணினி ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை இருகரம் கூப்பி தெரிவித்துக்கொள்கின்றோம் 🙏

✍️ இப்படிக்கு -- மாநில பொறுப்பிலுள்ள நிர்வாகிகள்...

திரு. தே.அகிலன். M.Sc.,M.A.,M.Ed., M.Phil தலைவர் 9585740001

திரு.மா.புகழேந்தி B.Sc., B.A., B.Ed செயலாளர்

திரு. ச.கார்த்திக் MSc., B.Ed பொருளாளர் 9789180422

திரு. மு.சரவணன் M.Sc., B.Ed.,D.T.T.Ed துணைத் தலைவர் 9945586698

திரு. ச.கனிஷ்கர் M.Sc.,M.Ed மாநில துணைத் செயலாளர் 8190900900

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.