இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு: நவ. 8-இல் கருத்துக் கேட்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 5 نوفمبر 2023

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு: நவ. 8-இல் கருத்துக் கேட்பு

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு: நவ. 8-இல் கருத்துக் கேட்பு

ஊதிய முரண்பாடு:8 ஆம் தேதி கருத்து கேட்பு கூட்டம்.

இடைநிலை ஆசி ரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்த கருத்துக்கேட்புக் கூட்டம் சென்னையில் வரும் நவ.8-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இது குறித்து தொடக்கக் கல்வி இயக்குநரகம் சார்பில் சம்பந்தப் பட்ட ஆசிரியர் சங்கங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியி ருப்பதாவது:

தொடக்கக் கல்வித் துறை யின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 1.6.2009-க்கு பின் இடைநிலை ஆசிரியர் பணியில் நியமனம் பெற் றவர்கள் 1.6.2009-க்கு முன் அதே பணியில் நியமனம் பெற்ற ஆசி ரியர்களுக்கு இணையான ஊதி யம் கோருவது (சம வேலைக்கு சம ஊதியம்) தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டம் சென்னையில் நவ. 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள பள்ளிக் கல்வித் துறை கூட்டரங்கில் மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் பங்கேற்க தமிழக ஆரம் பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசி ரியர் கூட்டணி, தமிழக ஆரம் பப் பள்ளி ஆசிரியர் சங்கம், தமி ழக தொடக்கப் பள்ளி ஆசிரி யர் கூட்டணி, தமிழ்நாடு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சங்கம் ஆகிய ஐந்து சங்கங்களின் பிரதிநிதிக ளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள் ளது. ஒரு சங்கத்துக்கு இருபிரதிநி திகளுக்கு மிகாமல் கலந்துகொள் ளுமாறு கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள்.

இதில் அரசு நிதித் துறைச் செய லர் (செலவினம்) தலைமையில் பள்ளிக் கல்வித் துறைச் செயலர், இயக்குநர் ஆகியோர் பங்கேற்க வுள்ளனர். மேற்குறிப்பிட்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட, அங்கீகரிக்கப் படாத சங்கங்களின் பிரதிநிதிக ளைத் தவிர மற்ற சங்கங்களின் பிர திநிதிகள் வேறொரு நாளில் நடை பெறும் கூட்டத்துக்கு அழைக்கப் படுவர் என அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.