3, 6, 9ம் வகுப்பு மாணவர்களுக்கு அடைவுத் திறன் தேர்வு - இன்று நடக்கிறது - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 2 نوفمبر 2023

3, 6, 9ம் வகுப்பு மாணவர்களுக்கு அடைவுத் திறன் தேர்வு - இன்று நடக்கிறது

3, 6, 9ம் வகுப்பு மாணவர்களுக்கு அடைவுத் திறன் தேர்வு - இன்று நடக்கிறது



தமிழ்நாட் டில் தொடக்க மற்றும் உயர் நிலைப் பள்ளிகளில் 3, 6 மற்றும் 9ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் கற்றல் திறன் அளவை தெரிந்து கொள்வதற்கான அடைவுத் திறன் தேர்வு இன்று நடக்கிறது.தேசிய அளவில் தொடக்க மற்றும் உயர்நி லைப் பள்ளிகளில் படிக் கும் மாணவர்களின்கற்றல் திறனை மதிப்பீடு செய்ய ஒவ்வொரு ஆண்டும் அடைவுத் திறன் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு முதல் மாநிலங் கள் மற்றும் யூனியன் பிர தேசங்களிலும் மேற்கண்ட அடைவுத்தேர்வை நடத்த ஒன்றிய கல்வித்துறை அமைச்சகம் அறிவுறுத்தி யுள்ளது. அதன்படி. நாடு முழு வதும் தேசிய ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக் குழுமத்தின் அடிப்படை யில் தேர்வு நடத்தப்படுகி றது. தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு நிதி யுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் 3, 6 மற்றும் 9ம் வகுப்புகளில் படிக்கின்ற மாணவர்களுக் கும் மேற்கண்ட தேர்வுநடத்தப்பட வேண்டும் என்றும் ஒன்றிய அரசு அறி வறுத்தியுள்ளதால், இந்த தேர்வு நாடு முழுவதும் இன்று நடக்கிறது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.