THE KID - November Month School Children's Movie - THE KID - Movie Summary & Dir Proceedings - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, November 9, 2023

THE KID - November Month School Children's Movie - THE KID - Movie Summary & Dir Proceedings



THE KID - November Month School Children's Movie - THE KID - Movie Summary & Dir Proceedings

இதையும் படிக்க | நவம்பர் மாத சிறார் திரைப்படம் "THE KID"

தமிழ்நாடுபள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-600006. ந.க.எண்.34785/எம்/மன்றம்/2023 நாள்: 08.11.2023

பொருள் :

பள்ளிக்கல்வி கல்விசாரா மன்ற செயல்பாடுகள் திரைப்படம் திரையிடுதல் மன்றம் 2023-24

பார்வை - —

சிறார் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பெறும் நடுநிலை, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 6-9 வகுப்பு மாணவர்கள் கண்டுணர்தல் திரையிடுதல் நவம்பர் மாதத்திற்கான - திரைப்படம் திரையிடல்- வழிகாட்டும் நெறிமுறைகள் வழங்குதல் - சார்ந்து.

: தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-600 006.

நாள் 30.10.2023.

ந.க.எண்:34785/எம்/மன்றம்/2023, 2022-2023 ஆம் கல்வியாண்டில், அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 6 முதல் 9 வகுப்பு வரை பயின்று வரும் மாணவர்கள் கண்டுணறும் வகையில் ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது வாரத்தில் சிறார் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, 2023-2024 ஆம் கல்வியாண்டில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் சிறார் திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகிறது.

மாணவர்கள் தாங்கள் வாழும் சூழலை புரிந்து கொள்ளுதல், பல்வேறு கலாசாரங்களின் தனித்தன்மையை அறிந்து கொள்ளுதல், தன்னம்பிக்கை, நட்பு பாராட்டுதல், குழுவாக இணைந்து செயல்படுதல் பாலின சமத்துவம் உணர்தல் ஆகிய பண்புநலன்களை அடையாளம் காணுதல், தங்களிடம் உள்ளார்ந்து புதைந்திருக்கும் படைப்பாற்றலை வெளிக்கொணர் செய்தல் ஆகியன இச்சிறார் திரைப்படம் திரையிடுதலின் நோக்கமாக அமைகிறது.

மேலும், இத்திரைப்படங்களை கண்ணுறும் மாணவர்களின் விரிசிந்தனை மேம்படுதல் மற்றும் விமர்சிக்கும் திறன் உள்ளிட்ட பண்புகள் பெற இந்நிகழ்வு தூண்டுகோலாக அமைகிறது.

இதனைத் தொடர்ந்து நவம்பர் -2023ல் திரையிடப்படவுள்ள திரைப்படம் 'தி கிட்' – The Kid (மௌன திரைப்படம்) ஆகும். இத்திரைப்படத் திரையிடல் அமர்விற்கான மாதிரி நிகழ்ச்சி நிரல், கதைச்சுருக்கம், திரைப்படம் திரையிட்ட பின் உரையாட வேண்டியவை, மற்றும் spotlight வினாக்கள் பின்வருமாறு வழங்கப்படுகிறது.

(II) திரைப்படத் திரையிடல் அமர்விற்கான மாதிரி நிகழ்ச்சி நிரல் திரைப்படத்தின் கால அளவு : 68 நிமிடங்கள்

நடிகர்கள்: சார்லி சாப்ளின், ஜாக்கி கூகன், எட்னா பர்வியன்ஸ்

இயக்கம்: சார்லி சாப்ளின் இத்திரைப்படத்தின் முதன்மை கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்திருப்பதோடு இதனை எழுதி, இயக்கி, இசையமைத்து அவரே படத்தொகுப்பும் செய்துள்ளார்.

"தி கிட்" (1921) திரைப்படம் சார்லி சாப்ளினின் படைப்புகளில் மிகச்சிறந்த ஒன்றாகும். இது அவரது சுயசரிதை படைப்பு ஆகும். இக்கதை சாப்ளின் அவரது குழந்தைப்பருவ அனுபவத்தின் அடிப்படையில் உருவானது.

இது ஒரு அமெரிக்க மௌன நகைச்சுவை நாடகத் திரைப்படம். நாடோடியான சாப்ளின் ஒரு தாயால் கைவிடப்பட்ட குழந்தையை தயக்கத்துடன் காப்பாற்றுகிறார், அதைத் தொடர்ந்து சாப்ளின் பாணி நகைச்சுவைத் தொடர்கிறது. காலம் கடக்கிறது, சாப்ளின் அக்குழந்தையை வளர்க்கிறார்.

அக்குழந்தையின் தாய் இறுதியில் குழந்தையை திரும்ப கேட்கும் போது, சாப்ளினும் அவர் வளர்த்த குழந்தை கூகனும் தப்பிக்க முயற்சிக்கின்றனர். அடுத்து என்ன நடக்கிறது என்பது மீதிக்கதை! படத்தின் இசையை சார்லி சாப்ளினே அமைத்துள்ளார்.

இத்திரைப்படம் மௌன திரைப்படங்களின் காலத்தில் ஒரு மிகச்சிறந்த படைப்பு.

2011 ஆம் ஆண்டு இது நூலகத்தால் ஐக்கிய மாகாணங்களின் தேசிய திரைப்படப் பதிவேட்டில் பாதுகாப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

குறிப்பு: > மௌன திரைப்படம் என்பது ஒத்திசைக்கப்பட்ட பதிவு செய்யப்பட்ட ஒலி இல்லாத திரைப்படம் அல்லது உரையாடலற்ற திரைப்படம் எனலாம்.

மௌனத் திரைப்படங்கள் கதை மற்றும் உணர்ச்சிகளை பார்வைக்கு வெளிப்படுத்தினாலும் உரையாடலின் முக்கிய வரிகள், தேவைப்படும் போது, Inter-title cards (இடை-தலைப்பு அட்டைகள்) பயன்படுத்துவர்.

இடை-தலைப்பு அட்டைகள் (Inter-title cards) 2 வகைப்படும்

1. கதாபாத்திர உரையாடலை வெளிப்படுத்தப் பயன்படுத்தப்படும் இடைத்தலைப்புகள் "உரையாடல் இடைத்தலைப்புகள்" (dialogue inter- titles) என்றும்,

2. கதை தொடர்புடைய உள்ளடக்கத்தை விளக்கப் பயன்படுத்தப்படும் தலைப்புகள் "வெளிப்படையான இடைத் இடை (expository intertitles) என்றும் குறிப்பிடப்படுகின்றன.

தலைப்புகள்"

(iii) திரைப்படம் திரையிட்ட பின் உரையாட வேண்டியவை (feedback)

--------

கருத்து கேட்பு அமர்வு

1. இந்த திரைப்படம் உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

2. இத்திரைப்படத்தின் மூலக்கரு / மையக் கருத்து என்ன?

3. கதை எதைப் பற்றியது அல்லது யாரைப் பற்றியது? அதை எப்படி அறிந்து கொண்டீர்கள்?

4. கதையில் நிகழும் மிக முக்கியமான சம்பவங்கள் என்னென்ன?

5. தங்களை மிகவும் கவர்ந்த கதாப்பாத்திரம் எது?

6. திரைப்படத்தின் வாயிலாக தாங்கள் கற்றுக்கொண்ட முக்கிய கருத்துகள் என்னென்ன?

7. இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ள நிகழ்விடம் படத்திற்கு எவ்வாறு சிறப்பு செய்கிறது? 8. இப்படத்தில் இசைக்கு எவ்வாறு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது? 9. இத்திரைப்படத்தில், எந்த ஒரு கதாப்பாத்திரத்திற்கு நீங்கள் பின்னனிக்குரல் கொடுக்க விரும்புவீர்கள், அவ்வாறு விருப்பப்படின், ஒரு நிகழ்வில் அவர் விரும்பும் பாத்திரத்திற்கு பின்னனி குரல் கொடுக்க சொல்லலாம்.

10. இத்திரைப்படத்தை பற்றி உங்களுக்கு தெரிந்தவர்களுடன் உரையாடுவீர்களா? மற்றும் அவர்கள் இப்படத்தை காண சொல்வீர்களா? ஏன்?

11. இத்திரைப்படம் பற்றி உங்களின் எண்ணங்களை 2 வரிகளில் எழுதுக.

(iv) மாணவர்களின் கவனத்தை ஈர்த்து ஆர்வத்தை தூண்டும் வினாக்கள் (Spotlight questions)

1. கதையின் தொடக்கத்தில், இடையில் தொடக்கத்தில், இடையில் மற்றும் முடிவில் என்ன நடக்கிறது?

2. இந்த கதை எந்த இடத்தில் நடக்கிறது?

3. இந்த கதை எங்கு நடக்கிறது என்று எப்படி அறிவது?

4. திரைப்படத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட முக்கிய கதாபாத்திரங்கள் உள்ளனவா?

5. இக்கதை முக்கிய கதாபாத்திரத்தை தழுவி உள்ளதா அல்லது பிறரை சார்ந்து அமைகிறதா?

6. எந்த கதாப்பாத்திரத்திற்காவது குறிப்பிட்ட இசை அல்லது ஒலி கொடுக்கப்பட்டுள்ளதா?

7. எந்த ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்திற்காவது வண்ணம்/வண்ணங்கள் தொடர்புடையதாக உள்ளதா ?

குறிப்பிட்ட 8. கதையின் தொடக்கத்தில் நாம் எங்கிருந்தோம் என்று நினைக்கிறீர்கள்?

9. இந்தக் கதை எப்போது நிகழ்கிறது எனக் கூற முடியுமா? இந்த கதை கடந்த காலத்தை சார்ந்ததா அல்லது நிகழ்காலத்தைச் சார்ந்ததா என்பதை எப்படி அறிவீர்கள்?

10. இத்திரைப்படத்தின் முழு கருத்தையும் மூன்று நிமிடங்களில் உங்களால் நடித்துக் காட்ட முடியுமா?

பார்வையில் காணும் செயல்முறைகளில் பள்ளிகளில் பாதுகாப்பாக திரைப்படம் திரையிடல் குறித்து விரிவான வழிகாட்டும் நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. இதனை தவறாது பின்பற்றி மேற்கூறியுள்ள திரைப்படத்தினை EMIS போர்டலில் இருந்து பதிவிறக்கம் செய்து பள்ளிகளில் 6-9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திரையிட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD Movie Summary & Dir Proceedings - PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.