கணினி இயக்குபவர் காலி பணியிடத்துக்கு விண்ணப்பிக்க அழைப்பு
அரியலூர், நவ. 28: அரியலூர் மாவட்ட ஆட்சியரைத் தலைவ ராகக் கொண்டு இயங்கி வரும் அரியலூர் மாவட்டக் குழந்தை கள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள உதவியாளர் கணினி இயக்குபவர் தற்காலிக பணியிடத்துக்கு தகுதி வாய்ந்த வர்கள் விண்ணப்பிக்கலாம். தொகுப்பூதியமாக மாதம் ரூ.13,240 மட்டும் வழங்கப்படும். 42 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். பிளஸ்-2 மற்றும் அதற்கு இணையான பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் அடிப்படை கணினி இயக்கும் அனுபவம் அவசியம்.
விண்ணப்பத்தை https://ariyalur.nic.in என்ற மாவட்ட இணையதள முகவரிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை 14.12.2023 அன்று மாலை 5 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, இரண்டா வது தளம், அரசு பல்துறை வளாகம், ஜெயங்கொண்டம் சாலை, அரியலூர் - 621704 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண் டும் என ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.