அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளி வேலை நாட்களில் மாலை 4 மணிமுதல் 5.30 மணி வரை நீட் பயிற்சி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 1 نوفمبر 2023

அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளி வேலை நாட்களில் மாலை 4 மணிமுதல் 5.30 மணி வரை நீட் பயிற்சி

அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளி வேலை நாட்களில் மாலை நேர நீட் பயிற்சி.

மாலை 4 மணிமுதல் 5.30 மணி வரை நீட் பயிற்சி அளிக்க உத்தரவு.

திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை பயிற்சி அளிக்க திட்டம்.

ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு மட்டுமே பயிற்சி.

யாரையும் கட்டாயப்படுத்த கூடாது

தொழிற்கல்வி இணை இயக்குனர்.



JEE/NEETக்கு பள்ளியிலேயே தினசரி மாலை நேரத்தில் பயிற்சி - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் வழிகாட்டு நெறிமுறைகள்

பள்ளிக்கல்வி போட்டித் தேர்வுகள் 2023-2024-ஆம் கல்வியாண்டில் JEE / NEET உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு மாணாக்கர்களை ஆயத்தப்படுத்துதல்- தொடர்பயிற்சி அளித்தல் வழிகாட்டு நெறிமுறைகள்.

(Standard Operating Procedure) இணை இயக்குநர் (தொழிற்கல்வி)

விருப்பமுள்ள மாணவ / மாணவிகளை தேர்வு செய்ய வழிகாட்டுதல்

• பயிற்சிக்கான கால அட்டவணையை மாநிலக் குழுவின் உதவியோடு தயார் செய்தல்

பயிற்சிக்குரிய வினாத்தாட்களைத் தயார் செய்ய முகாம் நடத்துதல்

• வினாவிற்கான விடைகளைத் தயாரித்தல்

பயிற்சிக்குத் தேவையான காணொளிக் காட்சிகளைத் தயாரித்தல்

குழுக்களின் பணிகளை ஒருங்கிணைத்தல்

மாவட்ட பணிகளை ஆய்வு செய்தல்

• மாநில புலனக்குழு /மாவட்ட புலனக்குழு ஏற்படுத்துதல்

• அரையாண்டு மற்றும் முழு ஆண்டு விடுமுறை நாட்களில் பயிற்சி வகுப்புகள் நடைபெறச் செய்தல்.

மாநில அளவிலான கல்வி சார் உதவிக்குழு

JEE / NEET உள்ளிட்ட நுழைவுத் தேர்வு பயிற்சிக்கு கால அட்டவணை தயார் செய்தல்

* பயிற்சிக்குரிய வினாத்தாட்கள்/விடைக்குறிப்புகள் தயார் செய்தல் (உரிய காலக்கட்டத்திற்குள் ஒப்படைத்தல்)

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மாணவ / மாணவிகளுக்கு ஏற்படும் சந்தேகங்களை மாவட்டக் குழுக்கள் விளக்குவதை கண்காணித்தல்.

அரையாண்டு மற்றும் முழு ஆண்டு விடுமுறை நாட்களில் வட்டார அளவில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதைக் கண்காணித்தல்.

பாடம் ஒன்றிற்கு ஆசிரியர்கள் வீதம் 20 ஆசிரியர்களை 4 ஒன்றிணைத்து செயல்படுதல்

மாவட்ட அளவிலான கல்வி சார் உதவிக்குழு இப்பயிற்சிகளைத் திட்டமிட்டு ஒருங்கிணைத்திட மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தலைமையில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர். இயற்பியல், கணிதம், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடங்களில் ஒவ்வொரு பாடத்திற்கும் இரண்டு பாட வல்லுநர்கள் (5 பாடங்கள் x 2 ஆசிரியர்கள் 10 ஆசிரியர்கள்) அடங்கிய குழு = அமைக்கப்பட வேண்டும்.

முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் நிலை) இக்குழுவின் உறுப்பினர் செயலராக - செயல்படுவார். பாட வல்லுநர்களுக்கான பயிற்சிகள் வழங்குதல் மற்றும் கற்பித்தலை வலுவூட்டுதல் உள்ளிட்ட பணிகளை இக்குழு மேற்கொள்ள வேண்டும்.

• பள்ளிதோறும் இப்பயிற்சியில் பங்குபெறும் மாணவ / மாணவிகளின் எண்ணிக்கை மற்றும் மாவட்ட அளவில் பங்குபெறும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை குறித்த விவரங்களை தொகுத்தல் மற்றும் தேர்வு சார்ந்த ஏற்பாடுகள் ஆகியனவற்றை முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ஒருங்கிணைத்து செயல்படுத்த வேண்டும்.

• மாநிலக் குழுவில் இருந்து வரும் வினாத்தாட்கள் மற்றும் விடைக்குறிப்புகள் ஆகியவற்றை பள்ளிகளுக்கு இச்செயல்பாடுகள் நடைபெறுவதை உறுதி செய்தல் வேண்டும்.

அனுப்பி . மாவட்ட அளவிலான இருவகையான (மாவட்டக்குழு மற்றும் பாட ஆசிரியர்கள் குழு) புலனக்குழுக்களை உருவாக்கி தகவல்களை பரிமாறிக்கொள்ளுதல்.

தலைமையாசிரியர் மற்றும் பள்ளி முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பு

• அனைத்து அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாமாண்டு பயின்றுவரும் மாணவர்களில் JEE/NEET உள்ளிட்ட நுழைவுத் தேர்வு எழுத விருப்பமும் ஆர்வமும் உள்ள மாணவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட வேண்டும்.

மேலும், பெரும்பாலான மாணவர்கள் நுழைவு தேர்வு பயிற்சியில் பங்கேற்கும் வகையில், அனைத்து மாணவர்களையும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆர்வமூட்டி ஊக்கப்படுத்தலாம். ஆனால் கட்டாயப்படுத்துதல் கூடாது. மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு பயிற்சி வழங்க, அனைத்து அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் பள்ளித் தலைமை ஆசிரியர் தலைமையில், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், பள்ளி அளவிலாள தினசரி தேர்வுகள் வார இறுதிநாளில் பயிற்சி வகுப்புகள் மற்றும் அரையாண்டு மற்றும் முழு ஆண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு பயிற்சி வழங்கிட மாநிலக்குழு உதவிபுரியும். மேலும். அரசு மேல்நிலைப்பள்ளிகளிலுள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகம் வழியேயும் மாணவர்களுக்கு தேர்விற்கான பயிற்சிகள் வழங்கப்படும்.

அதுசார்ந்து அவ்வப்போது புலனக்குழுவில் (Whatsapp) பகிரப்படும்.

NEET JEE போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கான பாடத்திட்டதின் அடிப்படையில் பள்ளிக்கல்வி இயக்ககத்தால் வழங்கப்படும் கால் அட்டவணையை பின்பற்றி முறையாக பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். பயிற்சி வழங்கப்படும் பாடத்தலைப்பினைப் பற்றிய சிறு அறிமுகம், அப்பாடப்பகுதியிலிருந்து நுழைவுத் தேர்வுகளுக்கு எதிர்நோக்கப்படும் வினாக்களைத் தீர்ப்பதற்கான சிறு குறிப்புகள், சூத்திரங்கள் மற்றும் முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்டுள்ள வினாக்கள் மற்றும் அவற்றை தீர்ப்பதற்கான எளிய முறைகள் ஆகியன மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.