கல்வி அதிகாரிகளை அவதூறாக பேசியதாக புகார் அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 5 نوفمبر 2023

கல்வி அதிகாரிகளை அவதூறாக பேசியதாக புகார் அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்



அதிகாரிகளை அவதூறாக பேசியதாக புகார் அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்

கிருஷ்ணகிரி

கல்வி அதிகாரிகளை அவதூறாகப் பேசிய புகாரில் விசாரணைக்கு ஆஜராகாத அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வேப்பனப்பள்ளி அருகே ஜிங்களூர் அரசு உருது நடுநிலைப் பள்ளியின் ஆங்கில ஆசிரியர் பாலகிருஷ்ணன் (49). இவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஆனந்தன் நேற்று உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது, “அரசை விமர்சித்த விவகாரத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் ஆசிரியர் பாலகிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தற்போது, கல்வித் துறை உயர் அதிகாரிகளைத் தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசியதாக புகார் எழுந்தது. மேலும், இதுதொடர்பான விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்” என்றனர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.