04.12.2023 ( திங்கட்கிழமை ) - உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 28 نوفمبر 2023

04.12.2023 ( திங்கட்கிழமை ) - உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு



நாகர்கோவில் கோட்டாறு தூய சவேரியர் ஆலய திருவிழாவை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் டிசம்பர் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சவேரியார் பேராலய கோட்டாறு தூய திருவிழாவினை முன்னிட்டு 04.12.2023 ( திங்கட்கிழமை ) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது



நாகர்கோவிலில் உள்ள புனித சவேரியார் தேவாலய திருவிழாவையொட்டி மாவட்ட ஆட்சியர்  உள்ளூர் விடுமுறை அறிவிப்பை அறிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்மிக்க கத்தோலிக்க திருத்தலமான நாகா்கோவில் கோட்டாறில் உள்ள புனித சவேரியாா் பேராலயத் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 8 ஆம் நாளான டிச. 1இல் மாலை 6.30 மணிக்கு குழித்துறை மறைமாவட்ட அருள்பணியாளா்கள் தலைமை வகித்து ஆடம்பரக் கூட்டு திருப்பலி நிறைவேற்றுகின்றனா்.

கோட்டாறு பங்கு அருள்பணிப் பேரவையினா் சிறப்பிக்கின்றனா்.

டிச.2 இல் மாலை 6.30 மணிக்கு கோட்டாறு மறைமாவட்ட முன்னாள் ஆயா் பீட்டா் ரெமிஜியூஸ் திருப்பலி நிறைவேற்றுகிறாா்.

அன்று இரவு 10.30 மணிக்கும், டிச.3இல் இரவு 10 மணிக்கு சவேரியாரின் தோ்பவனி நடைபெறுகிறது.

நிறைவு நாளான டிச.4ஆம் தேதி காலையில் கோட்டாறு மறைமாவட்ட ஆயா் நசரேன் சூசை பெருவிழா திருப்பலி நிறைவேற்றுகிறாா்.

8 மணிக்கு மலையாளத் திருப்பலி நடைபெறும். இதில், திருவனந்தபுரம் உயா் மறைமாவட்ட ஆயா் கிளாடின்அலெக்ஸ் தலைமை வகித்து திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றுகிறாா்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.