PET to PD Grade 2 Promotion Panel - DSE Proceedings உடற்கல்வி ஆசிரியர் - உடற்கல்வி இயக்குநர் நிலை-2 பதவி உயர்வு - உத்தேச தேர்ந்தோர் பட்டியல் - சார்பு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 8 نوفمبر 2023

PET to PD Grade 2 Promotion Panel - DSE Proceedings உடற்கல்வி ஆசிரியர் - உடற்கல்வி இயக்குநர் நிலை-2 பதவி உயர்வு - உத்தேச தேர்ந்தோர் பட்டியல் - சார்பு.



PET to PD Grade 2 Promotion Panel - DSE Proceedings தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநர்( நாட்டு நலப்பணித்திட்டம்) மற்றும் இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) (கூபொ) செயல்முறைகள், சென்னை-06.

ந.க.எண்.068822/எம்/இ3/2022, நாள்.03.11.223

பொருள்:

பள்ளிக் கல்வி - உடற்கல்வி ஆசிரியர் - உடற்கல்வி இயக்குநர் நிலை-2 பதவி உயர்வு - உத்தேச தேர்ந்தோர் பட்டியல் - சார்பு. உடற்கல்வி ஆசிரியர் பதவியிலிருந்து உடற்கல்வி இயக்குநர் நிலை-2 பதவி உயர்விற்கான உத்தேச தேர்ந்தோர் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. உத்தேச தேர்ந்தோர் பட்டியல் ஒரு காலிப்பணியிடத்திற்கு 3(மூன்று) நபர்கள் வீதம் தேர்ந்தோர் பட்டியல் (01.01.2023 நிலையில்) தயாரிக்கப்பட உள்ளது. இப்பட்டியலில் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் மேற்கொள்ள வேண்டி இருப்பின் அதற்கான ஆவணங்களுடன் முதன்மைக் கல்வி அலுவலரின் பரிந்துரையுடன் மின்னஞ்சலில் 06.11.2023-க்குள் காலை 11.00 மணிக்குள் பள்ளிக் கல்வி இயக்ககத்திற்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர் கையொப்பமிட்ட நகலினை இணை இயக்குநர் (நாட்டு நலப்பணித்திட்டம்) பெயரிட்ட முகவரிக்கு உடனடியாக அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மின்னஞ்சல் முகவரி: cosejdnss@gmail.com

இணைப்பு:-உத்தேச தேர்ந்தோர் பட்டியல்




PET to PD Grade 2 Promotion Panel
CLICK HERE TO DOWNLOAD PDF CLICK HERE TO DOWNLOAD DSE Proceedings PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.