தீபாவளி பண்டிகையை கருத்தில் கொண்டு நிலுவைத் தொகையுடன் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 22 أكتوبر 2023

தீபாவளி பண்டிகையை கருத்தில் கொண்டு நிலுவைத் தொகையுடன் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை.

தீபாவளி பண்டிகையை கருத்தில் கொண்டு நிலுவைத் தொகையுடன் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை.

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் மத்திய அரசு 4 சதவீத அகவிலைப்படி உயர்வினை அறிவித்துள்ளது. தமிழக அரசும் இந்த அகவிலைப்படி உயர்வினை உடனடியாக அறிவிக்க வேண்டும். ஏற்கனவே கடந்த மூன்று முறையாக தமிழகத்தில் அகவிலைப்படி உயர்வு தாமதமாக அறிவிக்கப்பட்டது. அகவிலைப்படி உயர்வு தாமதமாக அறிவிக்கப்பட்ட தோடு நிலுவைத் தொகையும் வழங்கப்படவில்லை. இறுதியாக அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்ட போது, எதிர்வரும் காலங்களில் மத்திய அரசு அறிவிக்கின்ற போது அதே கால கணக்கீட்டு தமிழக அரசும் அகவிலைப்படி உயர்வினை அறிவித்து வழங்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் என மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்து இருந்தார்கள். அந்த வகையில் தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள 4 சதவீத அகவிலைப்படி உயர்வினை தமிழக அரசும் உடனடியாக அறிவிக்க வேண்டும். வருகின்ற நவம்பர் 12 ஆம் தேதி தீபாவளி பண்டிகை வருகிறது. இப்பண்டிகையை தமிழகத்தில் இருக்கக்கூடிய பெரும்பாலாக மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு தீபவளி பண்டிகை கொண்டாடுவதற்கு உதவிடும் வகையில் தமிழக அரசு அகவிலைப்படி உயர்வினை அறிவித்து, அக்டோபர் மாத ஊதியத்துடன் நிலுவைத் தொகையும் சேர்த்து வழங்க வேண்டும் என பெரிதும் வேண்டுகிறேன்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.