கனமழை காரணமாக இன்று (03.10.23) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 2 أكتوبر 2023

கனமழை காரணமாக இன்று (03.10.23) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டம்

தொடரும் கனமழை – கன்னியாகுமரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!!

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. ராமநாதபுரம், சிவகங்கை, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக நேற்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து வரும் கனமழையால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள், அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மோதிரமலை – குற்றியார் தரைப்பாலம் மூழ்கியது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை தொடர்ந்து வரும் நிலையில், அம்மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் அறிவித்துள்ளார். காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்க இருந்த நிலையில், மழை காரணமாக கூடுதலாக ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.