ஒற்றை பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை - whatsappல் பரப்பப்படும் தவறான தகவல்கள்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, October 12, 2023

ஒற்றை பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை - whatsappல் பரப்பப்படும் தவறான தகவல்கள்!

Jyoti Prakash Scholarship and Mentorship Program for Orphans & Single-Parent Children. Students who have lost either or both of their parents. Applicants must be studying in Class 9-12, graduation, or postgraduation courses. Applicants must have secured at least 55% marks in their previous qualifying examination.

ஒற்றை பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை - whatsappல் பரப்பப்படும் தவறான தகவல்கள்! Scholarship for children who lost single parents - Misinformation spread on whatsapp!

ஒற்றை பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை - வாட்ஸ் அப்பில் பரப்பப்படும் தகவல்கள் தவறானது

ஒற்றை பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று வாட்ஸ் அப்பில் பரப்பப்படும் தகவல்கள் தவறானது.காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சுற்றறிக்கை.

குழந்தைகள் நலன் - மாவட்ட குழைந்தைகள் பாதுகாப்பு அலகு, காஞ்சிபுரம் - அரசின் திட்டம் குறித்து தவறான தகவல் பரவியது - பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தல் - சார்ந்து. காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம் ஒற்றை பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை பெற இயலும் என்ற தவறான தகவலை வாட்ஸ் ஆப் மூலம் சிலர் பரப்பி வருகின்றனர். ஒற்றை பெற்றோர் கல்வி உதவித்தொகை திட்டம் என்று சமூகப் பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. மேலும், பள்ளி மாணவர்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு பெற்றோருடன் அலுவலகம் வருகின்றனர். இதனால் பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.

எனவே, மேற்காணும் பொருள் சார்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு விழிப்புணர்வு வழங்குமாறு பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்த நடவடிக்கை மேற்கொள்ளும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.