அகவிலைப்படி உயர்வை வழங்கியதற்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் நன்றி அறிக்கை வெளியீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 25 أكتوبر 2023

அகவிலைப்படி உயர்வை வழங்கியதற்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் நன்றி அறிக்கை வெளியீடு

அகவிலைப் படிஉயர்வை வழங்கியதற்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் நன்றி அறிக்கை வெளியீடு

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்

ஒன்றிய அரசு - ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு தற்போது உயர்த்தியுள்ள 4% சதவீதம் அகவிலைப்படி உயர்வை தமிழ்நாடு அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கும் விரைவில் வழங்கிட ஆவண செய்ய வேண்டுதல் - சார்ந்து. ஒன்றிய அரசு தற்பொழுது ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 4% சதவீதம் அகவிலைப்படி உயர்வு அறிவித்து ஆணை பிறப்பித்து இருக்கிறது. ஏற்கனவே தமிழ்நாடு அரசு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும் போது இனி வருங்காலங்களில் ஒன்றிய அரசு எந்த தேதியில் அகவிலைப்படி உயர்வினை எந்த சதவீதத்தில் அறிவிக்கிறதோ அதே சதவீதத்தில் அதே தேதியில் அறிவிக்கப்படும் என்று தாங்கள் ஆணை பிறப்பித்து இருந்தீர்கள். தற்போது ஒன்றிய அரசு 4% அகவிலைப்படி உயர்வை அறிவித்துள்ள சூழலில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அகவிலைப்படி உயர்வு எதிர்பார்த்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் விரைவில் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை அறிவித்து அரசு ஊழியர், ஆசிரியர்களின் பாதுகாவலர் தாங்கள் என்பதை உணர்த்திடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.