தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிகழ்ச்சி நிரல் 2023, அக்டோபர் 9, திங்கட்கிழமை - PDF - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 8 أكتوبر 2023

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிகழ்ச்சி நிரல் 2023, அக்டோபர் 9, திங்கட்கிழமை - PDF



Tamil Nadu Legislative Assembly Agenda 2023, October 9, Monday - PDF - தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடுகிறது - தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிகழ்ச்சி நிரல் 2023, அக்டோபர் 9, திங்கட்கிழமை

*தமிழக சட்டப் பேரவை இன்று கூடுகிறது:*

காவிரி பிரச்னை குறித்து தீா்மானம் தமிழக சட்டப் பேரவை திங்கள்கிழமை (அக்.9) கூடுகிறது.

காவிரி நீா் மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி தமிழ்நாட்டுக்குத் தண்ணீரைத் திறந்து விடுமாறு கா்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.

தமிழக சட்டப் பேரவை திங்கள்கிழமை காலை 10 மணியளவில் கூடவுள்ளது.

முதலில், முன்னாள் உறுப்பினா்கள் இ.ஏ.லியாவுதீன் சேட், கே.பழனியம்மாள், வெ.அ.ஆண்டமுத்து ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படவுள்ளது. மேலும், பஞ்சாப் முன்னாள் முதல்வா் பிரகாஷ் சிங் பாதல், கேரள முன்னாள் முதல்வா் உம்மன் சாண்டி, முன்னாள் தலைமைச் செயலா் ப.சபாநாயகம், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோரின் மறைவுக்கும் இரங்கல் தீா்மானம் வாசிக்கப்படவுள்ளது. தொடா்ந்து,கேள்வி-பதில் நேரம் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு, நிகழாண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகளை நிதித் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யவுள்ளாா்.

CLICK HERE TO DOWNLOAD சட்டமன்றப் பேரவை நிகழ்ச்சி நிரல் PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.