தமிழக அரசின் ஆசிரியர் அரசு ஊழியர் விரோதப் போக்கை கண்டித்து தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் அறிக்கை
தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்
தமிழக அரசின் ஆசிரியர் அரசு ஊழியர் விரோதப் போக்கையும்!
*தமிழக அரசின் அராஜகச் செயல்களையும் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறோம்
கொடுத்த வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்றிட தமிழக அரசு உடனே முன்வரவில்லை என்றால் தமிழகத்தில் ஆசிரியர் அரசு ஊழியர்கள் போராட்டம் இன்னும் தீவிரமாக வெடித்துக் கிளம்பும். இதை யாராலும் தடுக்க முடியாது.
* ஆட்சிக்கு வந்து 30 மாதங்கள் உருண்டோடிய பிறகும், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் காற்றில் பறக்கவிடும் தமிழக அரசின் அலட்சியப் போக்கை, அராஜகப் போக்கை, தட்டிக்கேட்க, காந்திய வழியில் போராடிக் கொண்டிருந்த ஆசிரியர் பெருமக்களை உலக ஆசிரியர் தினமான இன்று கைது செய்து அராஜகச் செயலை அரங்கேற்றி இருக்கும் தமிழக அரசை எங்கள் சங்கம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது.
கொடுத்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றி, பள்ளிக்கல்வித் துறையில் சுமூக நிலையை விரைந்து எற்படுத்திட தமிழக அரசே விரைந்து செயல்படுக என்று வேண்டுகிறோம்.
الخميس، 5 أكتوبر 2023
New
தமிழக அரசின் ஆசிரியர், அரசு ஊழியர் விரோதப் போக்கை கண்டித்து தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் அறிக்கை
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.