நாளை நடைபெறும் இரண்டாம் கட்ட எண்ணும் எழுத்தும் பயிற்சி புறக்கணிப்பு - இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் சங்கம் ( SSTA ) அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 2 أكتوبر 2023

நாளை நடைபெறும் இரண்டாம் கட்ட எண்ணும் எழுத்தும் பயிற்சி புறக்கணிப்பு - இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் சங்கம் ( SSTA ) அறிவிப்பு

நாளை நடைபெறும் இரண்டாம் கட்ட எண்ணும் எழுத்தும் பயிற்சியை புறக்கணிப்பு - இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் சங்கம் ( SSTA ) அறிவிப்பு

ஏற்கனவே 14 ஆண்டுகள் கடந்த நிலையில் மீண்டும் மீண்டும் ஏதாவது ஒரு காரணத்தை கூறி கால தாமதம் செய்வது ஏற்புடையது அல்ல என்பதால் எங்களுடைய இந்த கோரிக்கைஅ நிறைவேறும் வரை தொடர்ந்து காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை நடத்த உள்ளோம் . அதனால் நாளை நடைபெறும் இரண்டாம் கட்ட எண்ணும் எழுத்தும் பயிற்சியை புறக்கணிக்கிறோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் . பயிற்சிக்கு செல்லா ஆசிரியர்கள் பள்ளியையும் புறக்கணித்திடவும் கேட்டுக் கொள்கிறோம் .

நாளை எண்ணும் எழுத்தும் பயிற்சியைப் புறக்கணிப்பது 100% உறுதி. எந்த தேதியையும் அறிவிக்காமல் தமிழ்நாடு முதலமைச்சர் சமவேலைக்கு சம ஊதியம் வழங்க இரண்டு மாதங்கள் கால அவகாசம் கேட்டதால் உடன்பாடு ஏற்படாமல் போராட்டத்தைத் தொடர முடிவு

*இடைநிலை ஆசிரியர்களுக்கு "சம வேலைக்கு" "சம ஊதியம்" வழங்க கோரி கடந்த 28.09.2023 முதல் தொடர்ந்து 5-வது நாளாக அஹிம்சை வழியிலான காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை சென்னை DPI ல் நடத்தி வருகிறோம்.*

*இதுவரை இந்த போராட்டத்தில் 217 ஆசிரியர்களுக்கு மேலாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மீண்டும் போராட்ட களத்திற்கு திரும்பி வருகின்றனர்.*

*ஏற்கனவே 14 ஆண்டுகள் கடந்த நிலையில் மீண்டும் மீண்டும் ஏதாவது ஒரு காரணத்தை கூறி கால தாமதம் செய்வது ஏற்புடையது அல்ல என்பதால் எங்களுடைய இந்த ஒற்றை கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை நடத்த உள்ளோம். அதனால் நாளை நடைபெறும் இரண்டாம் கட்ட எண்ணும் எழுத்தும் பயிற்சியை புறக்கணிக்கிறோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். பயிற்சிக்கு செல்லா ஆசிரியர்கள் பள்ளியையும் புறக்கணித்திடவும் கேட்டுக் கொள்கிறோம்.* *இதற்கு ஆதரவு தெரிவித்து களத்தில் உள்ள ஆசிரியர்களும் களத்தில் இல்லாமல் சூழ்நிலையால் வர முடியாத ஆசிரியர்களும் முழுவதுமான ஆதரவை அளிக்க வேண்டும்.*

*இடைநிலை இனம் அழிந்து கொண்டிருப்பதை நன்கு உணர்ந்த எம்மின தோழமை மூத்த ஆசிரியர் சங்கங்களும், இன உணர்வோடுள்ள ஆசிரியர்களும் இந்த போராட்டத்திற்கு தங்களின் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.*

*ஜே.ராபர்ட்*

*மாநில பொதுச்செயலாளர்*

*SSTA- இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம்*
எண்ணும் எழுத்தும் பயிற்சிக்கு நாளை (03.10.2023) வராத ஆசிரியர்களுக்கும் கலந்து கொள்ளாத ஆசிரியர்களுக்கும் No Work No Pay என்ற விதி பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.