முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்கு துணை கலந்தாய்வு நடத்தக் கோரிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 2 أكتوبر 2023

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்கு துணை கலந்தாய்வு நடத்தக் கோரிக்கை

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்கு துணை கலந்தாய்வு நடத்தக் கோரிக்கை

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களின் பணியிட மாறுதலுக்கு துணை கலந்தாய்வு நடத்த வேண்டும் என நேரடி நியமனம் பெற்ற முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்தது.

இதுகுறித்து அந்தச்சங்கத்தின் மாநில சட்டச்செயலர் எஸ்.கே.கண்ணன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

பள்ளிக் கல்வி துறையில் பணியாற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கு கடந்த மே மாதம் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது.

அப்போது மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறாததால், மாவட்டந்தோறும் மிகக்குறைவான முதுநிலை ஆசிரியர்கள் பணியிடங்கள் மட்டுமே இருந்தன. இதனால் பெரும்பாலான முதுநிலை ஆசிரியர்களுக்கு அவர்கள் விரும்பிய இடங்கள் கலந்தாய்வில் கிடைக்கவில்லை.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.