காலாண்டு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவருக்கு ’ஒரு நாள் பள்ளி தலைமை ஆசிரியர்’ பொறுப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 7 أكتوبر 2023

காலாண்டு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவருக்கு ’ஒரு நாள் பள்ளி தலைமை ஆசிரியர்’ பொறுப்பு



காலாண்டு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவருக்கு ’ஒரு நாள் பள்ளி தலைமை ஆசிரியர்’ பொறுப்பு


பொள்ளாச்சி பள்ளியில் சுவாரஸ்யம்.

பொள்ளாச்சி அருகேஅரசு உயர்நிலைப் பள்ளியில்காலாண்டு தேர்வில்முதல் மதிப்பெண்பெற்ற மாணவருக்கு ’ஒரு நாள்பள்ளி தலைமை ஆசிரியர்’ பொறுப்பு வழங்கி கவுரவிக்கப்பட்டது.

பொள்ளாச்சி அடுத்துள்ள மாக்கினாம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் காலாண்டு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற பத்தாம் வகுப்பைச் சேர்ந்த மாணவர் தர்ஷனை தலைமை ஆசிரியர் பாராட்டி ஒரு நாள் பள்ளி தலைமை ஆசிரியராக இருக்கையில் அமர வைத்தார். பொள்ளாச்சி அடுத்துள்ள மாக்கினாம்பட்டி ஊராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளிஇயங்கிவருகிறது.இங்கு 6 முதல்பத்தாம் வகுப்பு வரை276மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில்,காலாண்டு தேர்வில் முதல் மதிப்பெண் பெரும் மாணவர் ஒருநாள் பள்ளி தலைமை ஆசிரியராகவும்,இரண்டாவது மதிப்பெண் பெரும் மாணவர் உதவி தலைமை ஆசிரியராகவும் பொறுப்பு வழங்கப்படும் என பள்ளியின் தலைமை ஆசிரியர் ஹரிகிருஷ்ணன்,மாணவர்களிடம் தெரிவித்திருந்தார். அதன்படிநடந்து முடிந்த காலாண்டு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற தர்ஷன் மற்றும் இரண்டாவது மதிப்பெண் பெற்ற கவின்ராஜ் இருவரையும் தலைமை ஆசிரியர் மற்றும் சக ஆசிரியர்கள்,மாணவர்கள்பாராட்டினர்.

முதல் மதிப்பெண் பெற்ற தர்ஷனுக்கு சால்வை அணிவித்து தலைமை ஆசிரியர் இருக்கையில் அமர வைத்தும்,இரண்டாவது மதிப்பெண் பெற்ற கவின்ராஜையும் உதவி தலைமை ஆசிரியர் இருக்கையில் அமர வைத்தும்,ஒரு நாள் பொறுப்புகளை இரு மாணவர்களுக்கும் தலைமை ஆசிரியர் ஹரிகிருஷ்ணன் வழங்கினார்.

هناك تعليق واحد:

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.