அனைத்து வகை பள்ளிகளுக்கும் 01.11.2023 புதன்கிழமை உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 27 أكتوبر 2023

அனைத்து வகை பள்ளிகளுக்கும் 01.11.2023 புதன்கிழமை உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவு



அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் / சுயநிதி / மெட்ரிக் / சிபிஎஸ்சி தொடக்க/நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளிகள் ஆகிய பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் உத்தரவு.

அருள்மிகு ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோயில், திருக்குட நன்னீராட்டு பெருவிழாவை முன்னிட்டு அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் / சுயநிதி / மெட்ரிக் / சிபிஎஸ்சி தொடக்க/நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளிகள் ஆகிய பள்ளிகளுக்கு 01.11.2023 புதன்கிழமை அன்று (ஒரு நாள் மட்டும் உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் உத்தரவு. தமிழகத்தில் நவம்பர் 1 ஆம் தேதி நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதால் அன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

உள்ளூர் விடுமுறை

நாமக்கல் மாவட்டத்தில் கோவில் நகரின் மையப்பகுதியில் 18 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் ஆஞ்சநேயர் சுவாமி அருள்பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் இந்த கோவிலின் பங்குனி தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த நிலையில் நடப்பு ஆண்டு திருவிழா வருகிற அக். 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருவார்கள் .

நாமக்கல் மாவட்டம், நாமக்கல் நகர்புறத்தில் அமைந்துள்ள அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோயில் மற்றும் அருள்மிகு ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோயில், திருக்குட நன்னீராட்டு பெருவிழா 30.10.2023, 31.10.2023 மற்றும் 01.11.2023 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது.

இத்திருக்குட நன்னீராட்டு பெருவிழாவில் நாமக்கல் மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களைச் சார்ந்த பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அருள்மிகு ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோயில், திருக்குட நன்னீராட்டு பெருவிழாவை முன்னிட்டு நாமக்கல் வட்டத்தில் உள்ள அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் / சுயநிதி / மெட்ரிக் / சிபிஎஸ்சி தொடக்க/நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளிகள் ஆகிய பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் உத்தரவு.

புராண கதைகளின் படி மார்கழி மாதம் மூல நட்சத்திரம், சர்வ அமாவாசை தினத்தில், ஆஞ்சநேயர் பிறந்ததாக ஐதீகம். அதனால் ஆண்டு தோறும் அன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு நவம்பர் 1ம் தேதி கும்பாபிஷேகம் விமர்சியாக நடைபெற உள்ளது. அதனால் அன்றைய தினம் நாமக்கல் தாலுகாவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது இது குறித்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.