ஜாக்டோ - ஜியோ (JACTTO-GEO) சுற்றறிக்கை - நாள்.12.10.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 12 أكتوبر 2023

ஜாக்டோ - ஜியோ (JACTTO-GEO) சுற்றறிக்கை - நாள்.12.10.2023

ஜாக்டோ - ஜியோ (JACTTO-GEO) சுற்றறிக்கை - நாள்.12.10.2023 JACTTO-GEO Circular - Dated 12.10.2023

ஜேக்டோ - ஜியோ உயர்மட்ட குழு கூட்டம்... 18-10-2023

ஜாக்டோ - ஜியோ (JACTTO-GEO) (Joint Action Council of Tamilnadu Teachers Organisations and Government Employees Organisations)

சுற்றறிக்கை எண்.5/2023

நாள்.12.10.2023

மாநில உயர் மட்டக் குழு கூட்டம்

அன்பிற்கினிய தோழர்களே !

வணக்கம்,

நம்முடைய மாநில உயர் மட்டக் குழு கூட்டம் 18.10.2023 புதன்கிழமை மாலை 3 மணிக்கு பின்வரும் பொருள் குறித்து திருச்சியில் நடைபெற உள்ளது. அதில் தாங்கள் அவசியம் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கி சிறப்பிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மாநில உயர் மட்டக் குழு கூட்டம்

நாள் : 18.10.2023 புதன்

நேரம்: மாலை 3 மணி

இடம் : ஐஸ்வர்யம் ஹால் அஜந்தா ஹோட்டல் (மத்திய பேருந்து நிலையம் அருகில்) திருச்சி பொருள்

1. கடந்த 2.4.23 அன்று திருச்சியில் நடைபெற்ற மாநில ஒருங்கிணைப்பாளர்கள், உயர்மட்டக் குழுக் கூட்ட முடிவின் அடிப்படையில் 11.4.23 அன்று கோட்டை முற்றுகை என்ற அறிவிப்பினைத் தொடர்ந்து 8.4.23 அன்று மாண்புமிகு அமைச்சர்கள் மூலம் பேச்சு வார்த்தை நடத்தியது குறித்து,

2 பேச்சுவார்த்தைக்குப் பிறகான ஆசிரியர்கள். அரசு ஊழியர்கள் -பணியாளர்களின் கோரிக்கை மீதான அரசின் நடவடிக்கைகள்

3 கோரிக்கைகளை வெல்வதற்கு எதிர்கால இயக்க நடவடிக்கைகளைத் திட்டமிடுதல்

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.