TRB இன்று 16.10.2023 வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - Chief Minister Research Fellowship (CMRF) Eligibility Test for the year 2023 – 2024 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 16 أكتوبر 2023

TRB இன்று 16.10.2023 வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - Chief Minister Research Fellowship (CMRF) Eligibility Test for the year 2023 – 2024



TRB இன்று 16.10.2023 வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

Chief Minister Research Fellowship (CMRF) Eligibility Test for the year 2023 – 2024

ஆசிரியர் தேர்வு வாரியம்

பத்திரிக்கைச் செய்தி

முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகைத் திட்டத்திற்கான தகுதித் தேர்வு(CMRF)

தமிழ்நாட்டில் உள்ள மாணாக்கர்களுக்கிடையே ஆராய்ச்சி திறனை வளர்க்கவும் புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்வதை ஊக்குவிக்கவும் மாண்புமிகு முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகைத் திட்டத்திற்கான தகுதித் தேர்வு 2023 - 2024 ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்படுகின்றது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முழு நேர ஆராய்ச்சி படிப்பிற்காக ( Full Time PhD Programme) நிதியுதவி அளிக்கும் வகையில் தமிழ்நாட்டை சார்ந்த தகுதியான மாணாக்கர்களிடமிருந்து 2023 - 2024 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகை தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. இதன் தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (https//trb.tn.gov.in/) மேற்படி அறிவிக்கை 16:10.2023 அன்று வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக 20.10.2023 முதல் 15.11.2023 பிற்பகல் 5.00 மணிவரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD TRB NOTIFICATION PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.