" ஆசிரியர்களுடன் அன்பில் " நிகழ்ச்சி : ஆசிரியர்களின் பல்வேறு பிரச்சனைகளை குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 8 أكتوبر 2023

" ஆசிரியர்களுடன் அன்பில் " நிகழ்ச்சி : ஆசிரியர்களின் பல்வேறு பிரச்சனைகளை குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு



"Anbil with teachers" programme: Minister Anbil Mahesh's speech on various problems of teachers " ஆசிரியர்களுடன் அன்பில் " நிகழ்ச்சி : ஆசிரியர்களின் பல்வேறு பிரச்சனைகளை குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு

திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் ஆற்றிய உரை...

ஆசிரியர் மனசு மூலமாக இன்றைய நிகழ்ச்சியின் போது கொடுக்கப்பட்ட 21 கோரிக்கைகளில் 11 கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட இருப்பதாகவும் அவைகள் என்னென்ன என்பதை அமைச்சரே வாசித்திருக்கிறார்.. அதனை இந்த காணொளியில் 23ஆம் நிமிடத்தில் இருந்து பாருங்கள்...

அந்தப் பதினொன்றில் மிகவும் முக்கியமான பதவி உயர்வுக்கு டெட் தேர்வு தேவை என உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்தும் விரைவில் முடிவெடுக்க இருப்பதாகவும் அறிவிப்பு...

ஆசிரியர்கள் தங்களை வருத்திக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் - திருச்சியில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு.

பள்ளிக்கல்வித் துறைக்காக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட வாக்குறுதிகள் 32. அவற்றில் ஏறக்குறைய 29 வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம்.

போராடிய ஆசிரியர்களுக்கு ஆதரவாக வந்து பேசிய பலரும் ஆளாளுக்கு ஒரு கருத்தை தெரிவித்தனர். அதை தவறென சொல்லவில்லை. ஆனால், உண்மை நிலை எங்களுக்குத்தான் தெரியும்.

நம் இருவருக்கும் இடையே உள் நுழைந்து நம்மை பிரிக்கும் முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு ஒன்றுதான் பதில். அடித்தாலும், பிடித்தாலும் நாம் அண்ணன், தம்பிகள். எங்களுடைய கரத்தை நீங்கள் வலுப்படுத்துங்கள். உங்களுக்கு உறுதுணையாக இருப்போம் - ஆசிரியர்களுடனான கலந்தாய்வு நிகழ்வில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு.

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு👇

CLICK HERE Video

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.