ரயில்வே ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு!
புது தில்லி, அக். 24: ரயில்வே ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப் படி உயர்வை ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
இதன் மூலம் அக விலைப்படி 42 சதவீதத்தில் இருந்து 46 சதவீதமாக உயர்ந்துள்ளது.
2023 ஜூலை 1 –ஆம் தேதியில் இருந்து கணக்கிட்டு இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட இருக்கிறது.
ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தில் இருந்து 46 சதவீத அகவிலைப்படி கணக்கிடப்படும்.
கடந்த வாரத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்டது.
மேலும், ரூ.15,000 கோடி போனஸ் அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ரயில்வே ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. ஜூலை மாதத்தில் இருந்து அகவிலைப்படி கணக்கிடப்பட்டு, அடுத்த மாதம் பெறும் ஊதியத்துடன் சேர்த்து தொகை மொத்தமாக வழங்கப்பட இருக்கிறது.
ரயில்வே ஊழியர்கள் கூட்டமைப்பினர் இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.