உள்ளூர் விடுமுறை - சேலம் மாவட்டம் - சேலம் மாநகர் அருள்மிகு ஸ்ரீ கோட்டை மாரியம்மன் - திருக்கோயில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பெரிய மாரியம்மன் திருக்கோயில் - திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழா - 27.10.2023 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெறுதல் - உள்ளூர் விடுமுறை அளித்து -உத்தரவிடுதல் தொடர்பாக, ஆணை:
சேலம் அருள்மிகு ஸ்ரீ கோட்டை மாரியம்மன் திருக்கோயில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பெரிய மாரியம்மன் திருக்கோயில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழாவினை முன்னிட்டு, சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் 27.10.2023 (வெள்ளிக்கிழமை) அன்று உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.
மேற்படி உள்ளூர் விடுமுறை, செலாவணி முறிச்சட்டம் 1881 (Negotiable Instrument Act 1881)-ன் கீழ் வராது என்பதால், அரசுப்பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு மாவட்டத்திலுள்ள. மாவட்ட மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக, சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் 04.11.2023 ஆம் தேதி சனிக்கிழமை அன்று பணிநாளாகும் என உத்தரவிடப்படுகிறது.
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.